TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

பிபிஎல் - வாரியர்ஸ்களுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டியில் அவாதி வெற்றி

பிபிஎல் - வாரியர்ஸ்களுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டியில் அவாதி வெற்றி
X
By

Karthiga Rajendran

Published: 23 Jan 2020 7:09 PM GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீகின் நான்காவது நாள் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் - அவாதி வாரியர்ஸ் அணிகள் மோதின. வாரியர்ஸ்களுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டியில் அவாதி அணி வெற்றி பெற்றது

ஏற்கனவே பெங்களூரு ராப்டர்ஸ் அணிக்கு எதிரான டையில் வெற்றியை ஈட்டியிருந்த

நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ், இந்த டையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்

களமிறங்கியது.

முதலில் தொடங்கிய கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில், 15-8, 11-15, 14-15 என்ற புள்ளிக்கணக்கில் அவாதி வாரியர்ஸின் ஹியூன், பெடெர்சன் இணை வெற்றி பெற்றது.

தொடக்க போட்டியை அவாதி அணி வெற்றிருந்தாலும், அடுத்த போட்டியில் நார்த் ஈஸ்டர்ன்

அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், அவாதியின்

வின்செண்டை 13-15, 15-10, 15-11 என்ற புள்ளிக்கணக்கில் நார்த் ஈஸ்டர்ன் அணியின் யூ

போட்டியை வென்றார். இது டிரம்ப் கேம் என்பதால், இரண்டு புள்ளிகள் பெற்றது நார்த்

ஈஸ்டர்ன் அணி.

இந்த போட்டியைத் தொடர்ந்து வந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், 15-13, 15-14

என நார்த் ஈஸ்டர்ன் அணியின் லீ போட்டியை வென்றார். கடைசி வரை போராடிய அவாதி

அணியின் சாங் தோல்வியைத் தழுவினார்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் நான்காவது போட்டி நடந்தது. அவாதி அணிக்கு இது டிரம்ப் கேம் என்பதால், தொடக்கம் முதலே கவனமாக விளையாடினர் ஹியூன், சியோல் இணை. இறுதியில் 15-8, 14-15, 12-15 என அவாதி அணி போட்டியை வென்றது

முதல் நான்கு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி

பெற்றிருந்தனர். இரு அணிகளும் தலா ஒரு டிரம்ப் போட்டியில் ஜெயித்திருந்ததால், 3-3

என சம நிலையில் இருந்தனர்.

கடைசி போட்டியான மற்றுமொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி, வெற்றி பெறபோகும் அணியை தீர்மானிப்பதாக இருந்தது. இந்த போட்டியில் நார்த் ஈஸ்டர்னின் சென்சொம்பூன்சக், அவாதி அணியின் தே ஆகியோர் போட்டியிட்டனர்.

கடைசி போட்டியான மற்றுமொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி, வெற்றி பெறபோகும்

அணியை தீர்மானிப்பதாக இருந்தது. இந்த போட்டியில் நார்த் ஈஸ்டர்னின்

சென்சொம்பூன்சக், அவாதி அணியின் தே ஆகியோர் போட்டியிட்டனர். இதில், 9-15, 13-15 என

நேர் செட் கணக்கில் தே வெற்றி பெற்றார்.

இறுதியில், 2-3 என்ற கணக்கில் அவாதி வாரியர்ஸ் அணி வென்றது. இன்றைய டையில்

தோல்வியுற்ற நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணி, மொத்தம் 7 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாம்

இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் அவாதி வாரியர்ஸ் மூன்றாம் இடத்தில் உள்ளது.

சென்னையில் நடைபெற இருக்கும் கடைசி நாள் ஆட்டமான

நாளை, சென்னை சூப்பர்ஸ்டார்ஸ், பெங்களூரு ரப்டர்ஸ் அணிகள் மோத உள்ளனர்

Next Story
Share it