திங்கட்கிழமை, ஜனவரி 18, 2021
Home அண்மை செய்திகள் இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு ‘சிறந்த ஹாக்கி வீரர்’ விருது

இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு ‘சிறந்த ஹாக்கி வீரர்’ விருது

சிறந்த ஹாக்கி வீரர் விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமைக்கு மன்ப்ரீத் இப்போது சொந்தக்காரர்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு, 2019-ம் ஆண்டிற்கான சிறந்த ஹாக்கி வீரர் விருது அறிவித்துள்ளது.

1999-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறந்த ஹாக்கி வீரர் விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமைக்கு மன்ப்ரீத் இப்போது சொந்தக்காரர்.

இந்த விருதுக்கு 6 ஹாக்கி வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதில், அதிக வாக்குகள் பெற்று மன்பிரீத் சிங் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை பெல்ஜியம் வீரர் ஆர்தூர் வான் டொரேன், மூன்றாம் இடத்தை அர்ஜெண்டீனாவின் லூகாஸ் விலா ஆகியோர் பெற்றனர்

2011-ம் ஆண்டு தேசிய அணியில் அறிமுகமான மன்பிரீத், சிறப்பான பயணத்தை மேற்கொண்டுள்ளார். மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, 2019-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 2020 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பங்கேற்பது உறுதியானது. ஏற்கனவே, 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி சார்பாக மன்ப்ரீத் விளையாடியுள்ளார்.

இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகவும், முக்கியமான வீரராகவும் தனது இடத்தை பதிவு செய்துள்ளார் மன்பிரீத் சிங்.

பிரிஸ்பேனில் 2003ல் ஆஸி.யை வெளுத்து வாங்கிய கங்குலியை போல் நாளை யார் செய்வார்?

சவுரவ் கங்குலி
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. பிரிஸ்பேன் மைதானம் எப்போதும் ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக இருந்துள்ளது....