TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

புரோ லீக் ஹாக்கி:நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துமா இந்தியா?

புரோ லீக் ஹாக்கி:நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துமா இந்தியா?
X
By

Ashok M

Published: 20 Feb 2020 1:20 PM GMT

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பான எஃப்.ஐ.ஹெச் சார்பில் புரோ லீக் என்ற தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான புரோ லீக் தொடர் ஜனவரி மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய அணி பங்கேற்று உள்ளது. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும் மற்றொரு போட்டியில் டிராவும் செய்தது.

இதனையடுத்து பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்தது. இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் இருப் போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியா

நடப்பு புரோ லீக் தொடரில் ஆஸ்திரேலிய அணி இதுவரை இந்தத் தொடரில் நான்குப் போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அத்துடன் ஒரு தோல்வி மற்றும் இரு போட்டிகளை டிரா செய்துள்ளது. பிரிட்டன் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் மட்டும் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றது. அந்த அணி சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

எனினும் கடந்த 2016ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி இந்திய அணியிடம் சர்வதேச போட்டிகளில் தோற்கவில்லை. எனவே இந்தப் போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அணி அந்த நம்பிக்கையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தனது முதல் புரோ லீக் தொடரிலேயே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

நெதர்லாந்து,பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். பெல்ஜியம் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய வீரர்கள் செய்த சிறிய தவறை பயன்படுத்திய பெல்ஜியம் அணி வெற்றிப் பெற்றது. இந்த தவறை இந்திய அணி ஆஸ்திரேலிய போட்டியில் திருத்தி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாக்கி

கடைசியாக நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளின் 30 சர்வதேச மோதல்களில் ஆஸ்திரேலிய 22 போட்டிகளிலும், இந்தியா 6 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளன. இரு போட்டிகளில் டிராவில் முடிந்துள்ளன. ஆகவே தரவுகளை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கி இருந்தாலும், தற்போதைய ஃபார்மை வைத்து பார்க்கும் போது இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக உள்ளது.

எனவே இந்த இரு போட்டிகளும் மிகவும் பரப்பரப்பாக இருக்கும் என்று கருதப் படுகிறது. இப்போட்டிகளில் ஒடிசாவின் புவனேஷ்வரிலுள்ள கலிங்கா மைதானத்தில் இரவு 7 மணி தொடங்குகின்றன.

Next Story
Share it