TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

கால்பந்து

தேசிய கால்பந்து தொடருக்கு தமிழக சிங்கப்பெண்கள் தேர்ச்சி!

தேசிய கால்பந்து தொடருக்கு தமிழக சிங்கப்பெண்கள் தேர்ச்சி!
X
By

Karthiga Rajendran

Published: 19 Jan 2020 1:47 PM GMT

மகளிருக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. மினெர்வா எஃப்.சி, எஃப்.சி தமிழச்சி, ஃபுட்பால் ப்ளஸ், சேது எஃப்.ஏ, வாவ் வுமன், தமிழ்நாடு போலீஸ் மற்றும் சேது எஃப்.சி ஆகிய 7 அணிகள் இதில் பங்கேற்றன. மகளிருக்காக மாநில அளவில் நடத்தப்பட்ட முதல் லீக் தொடர் இது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய ஆரம்ப போட்டிகள், இன்று இறுதிக்கட்டத்தை எட்டியது. இத்தொடரில் வெற்றி பெறும் அணி தேசிய அளவிலான கால்பந்து லீக் தொடருக்கு தகுதி பெற முடியும். இந்நிலையில், தேசிய கால்பந்து தொடருக்கு தமிழக சிங்கப்பெண்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

மாநில அளவிலான தொடரில், ஒவ்வொரு அணியும் தலா 6 போட்டிகளில் விளையாடின. இதில், அனைத்து போட்டிகளையும் வென்று சேது எஃப்.சி அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. இதன் மூலம், ‘இந்தியன் வுமன்ஸ் லீக்’ தொடருக்கு தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. தமிழகத்தில் இருந்து தேர்வாகியிருக்கும் ஒரே அணி இது!

பெங்களூருவில் வரும் ஜனவரி 24-ம் தேதி தொடங்க இருக்கும் இத்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த சேது எஃப்.சி அணி பங்கேற்க உள்ளது. ஜனவரியில் தொடங்கும் இத்தொடர் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறும்.

மகாராஷ்டிரா, மணிப்பூர், குஜராத், ஒரிஸா, கோவா, கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல அணிகள் இத்தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த சேது எஃப்.சி அணி - மணிப்பூர் போலீஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் சேது எஃப்.சி அணி அதிரடியாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த ஆண்டு போல, இம்முறையும் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம் பிடித்துள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதியில் போட்டியிடும்.

இதுவரை,

தேர்வாகியுள்ள 11 அணிகளின் விவரம்; பிபிகே டிஏவி ஃபுட்பால் க்ளப் (பஞ்சாப்),

கிக்ஸ்டார்ட் எஃப்.சி (கர்நாடகா), ஃபுட்பால் க்ளப் கோலாப்பூர் சிட்டி

(மகாராஷ்டிரா), கங்சுப் ரோடு யங் பிஸிக்கல் அண்டு ஸ்போர்ட்ஸ் அஸோசியேஷன் -

க்ரிப்ஷா (மணிப்பூர்), பரோடா ஃபுட்பால் அகாடமி (குஜராத்), கென்க்ரே எஃப்.சி

(மகாராஷ்டிரா), தெற்கு இரயில்வே (ஒடிஷா), பெங்களூரு யுனைடட் ஃபுட்பால் க்ளப்

(கர்நாடகா), எஸ்.எஸ்.பி வுமன் ஃபுட்பால் க்ளப் (மேற்கு வங்காளம்), பிடேஷ் 11 ஸ்போர்ட்ஸ்

க்ளப் (கோவா), சேது எஃப்.சி (தமிழ்நாடு)

Next Story
Share it