செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021
Home அண்மை செய்திகள் போர்ச்சுகல் லீக் கிளப் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ள இந்திய யு-17 உலகக்கோப்பை கால்பந்து அணியின் டிஃபென்டர்

போர்ச்சுகல் லீக் கிளப் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ள இந்திய யு-17 உலகக்கோப்பை கால்பந்து அணியின் டிஃபென்டர்

2017 முதல் 2019 வரை ஐ லீக் தொடரில் இந்தியன் ஏரோஸ் அணிக்காக ஆடி வந்தார் ஸ்டாலின்

இந்திய கால்பந்து அணியின் டிஃபென்டர் சஞ்சீவ் ஸ்டாலின் போர்ச்சுகல் நாட்டினைச் சேர்ந்த செர்டநென்செ எப் சி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த அணி அந்த நாட்டின் மூன்றாவது நிலை லீக்கினில் விளையாடி வருகிறது. முதல் முறையாக இந்தியாவில் நடந்த கால்பந்து உலகக்கோப்பையான 17 வயதுக்குட்பட்டோரான ஃபிஃபா ஆண்கள் உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சஞ்சீவ் விளையாடி இருந்தார். அந்த போட்டி தொடரில் இந்தியா அடித்த ஒரே கோலுக்கு அசிஸ்ட் செய்த பெருமையும் இவரையை சாரும்.

இதற்கு முன்னதாக போர்ச்சுகல் முதல் நிலை லீக்கினில் விளையாடும் அணியான சி டி ஏவ்ஸ் அணியின் 23 வயதுக்கு உட்பட்டோர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொரானா காரணமாக அந்த அணி பணக் கஷ்டத்தில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 2017 முதல் 2019 வரை ஐ லீக் தொடரில் இந்தியன் ஏரோஸ் அணிக்காக ஆடி வந்தார் ஸ்டாலின். மற்ற இளம் வீரர்கள் போல ஐ எஸ் எல் தொடரில் ஆடாமல் துணிச்சலாக வெளிநாட்டு லீக்கினில் ஆட முடிவெடுத்தற்காக நிச்சயமாக இவரை பாராட்ட வேண்டும். பல பயிற்சியாளர்கள் மற்ற வீரர்களையும் இதேபோல் நடக்க அறிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த அணியின் மூத்த வீரர்களான சுனில் சேத்ரி, குர்ப்ரித் சிங் சாந்து இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

‘பொங்கல் டெஸ்ட்’ – 61 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வரலாற்று சிறப்பு நிகழ்வு!

பண்டிகை நாட்கள் அல்லது அதற்கு அருகிலுள்ள நாட்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றால் அதனை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். அதுவும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம் பலர் பண்டிகை விடுமுறையில் நேரடியாக கிரிக்கெட் பார்க்க ஆசையுடன் செல்வார்கள். இவ்வாறு பண்டிகை விடுமுறைகளை குறிவைத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்....