TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஐ எஸ் எல் 2019-20 இறுதிப்போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையின் எப் சி அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற ஏ டி கே

ஐ எஸ் எல் 2019-20 இறுதிப்போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையின் எப் சி அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற ஏ டி கே
X
By

Ajanth Selvaraj

Published: 15 March 2020 5:54 PM GMT

இந்தியன் சூப்பர் லீக்கின் 6ஆவது சீசனின் இறுதியாட்டம் கோவாவிலுள்ள ஃபட்டோர்டா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ஐ எஸ் எல் இரண்டு முறை கோப்பைகளை வென்ற இரண்டு அணிகளான சென்னையின் எப் சி மற்றும் அமர் டோமர் கொல்கத்தா அணிகள் இந்த இறுதிப்போட்டியில் மோதியதால் அனைவரிடமும் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டியினை காண எந்த ரசிகர்களும் அனுமதிக்க பட மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்திருந்ததால் மைதானம் வெறிச்சோடி இருந்தது.

முதல் முறையாக மூன்றாவது ஐ எஸ் எல் பட்டம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஆட்டத்தினை தொடங்கினர் இரு அணிகளும். கோல் அடிக்க கிடைத்த முதல் வாய்ப்பினை தவறவிட்டனர் சென்னையின் எப் சி அணியினர். ஆனால் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி ஏ டி கே அணிக்காக முதல் கோல் அடித்தார் ஜாவி ஹெர்னான்டஸ். இந்த தொடரில் இவர் அடிக்கும் முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது. பதில் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் அணியில் ஒரு மாற்றம் செய்தார் சென்னை மேனேஜர் ஓவன் காயல். சிறிது தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த ஜெர்மன்ப்ரீத்திற்கு பதிலாக தமிழக வீரர் எட்வின் சிட்னியை கொண்டு வந்தார். ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணிக்கு பெரிய அதிர்ச்சியாக அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கரும் கேப்டனும் ஆன ராய் கிருஷ்னா காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து வெளியேறினார். ஆட்டத்தின் முதல் பகுதியின் இரு அணிகளும் மேலும் எந்த கோல்களும் அடிக்கவில்லை.

ஏ டி கே

இரண்டாவது பகுதியின் தொடக்கத்திலேயே சென்னையின் எப் சி அணிக்கு மற்றொரு அதிர்ச்சி கிடைத்தது. எடு கார்சியா மூலம் இரண்டாவது கோல் அடித்து கோப்பையை கைப்பற்றுவதில் மேலுமொரு அடியை எடுத்து வைத்தனர் ஏ டி கே அணியினர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினர் சென்னையின் எப் சி அணியினர். இதற்கு பலனாக 69ஆவது நிமிடத்தில் முதல் கோலினை அடித்தார் நேர்க வால்ஸ்கிஸ். கோல் தந்த உத்வேகத்தில் இரண்டாவது கோல் அடிக்கும் தாக்குதலில் ஈடுபட்டனர் சென்னை அணியினர். ஆனால் அனைத்து முயற்சிகளையும் தடுத்து சிறப்பான விளையாடினர் ஏ டி கே அணியினர். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் மேலுமொரு கோல் அடித்து ஏ டி கே வின் வெற்றியை உறுதி செய்தார் ஜாவி ஹெர்னான்டஸ். இதன் மூலம் ஐ எஸ் எல் லில் முதல் முறையாக மூன்று கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளனர் ஏ டி கே அணியினர். ஏ டி கே அணியில் தமிழகத்தை சேர்ந்த மைக்கேல் ரெஜின் மற்றும் மைக்கேல் சூசைராஜ் ஆகியோர் இடம்பெற்றிருப்பது குறிப்படதக்கது.

ஓவன் காயல்

இறுதிவரை போராடினாலும் சென்னையின் எப் சி அணியால் இரண்டாவது கோலினை அடிக்க முடியவில்லை. அனைத்து முயற்சிகளையும் மலை போல் நின்று தகர்த்தார் கொல்கத்தா அணியின் கோல் கீப்பர் அரிந்தம் பட்டாச்சார்யா. இதன்மூலம் ஐ எஸ் எல் இறுதிப்போட்டியில் முதல் முறையாக தோல்வியடைந்தது சென்னையின் எப்ஸசி அணி. இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்தாலும் சென்னையின் எப் சி நிச்சயம் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. ப்ளே ஆஃப்ஸ் சுற்றுக்கே தகுதிபெறமாட்டார்கள் என அனைவரும் கூறியபோது அனைத்து கணிப்புகளையும் தவிடுப்பொடியாக்கி மிகச்சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தினர். இவை அனைத்திற்கும் முக்கிய காரணமான ஒருவர் அணியின் புதிய மேனேஜர் ஓவன் காயல் தான். இவர் பொருப்பேற்ற போது அணி மிகவும் தடுமாறி கொண்டிருந்தது. ஆனால் அனைத்தையும் மிக விரைவாக மாற்றி அனைவரும் ஆச்சர்யபடும் விதமாக சென்னையின் எப் சி அணியினை விளையாட வைத்தார். இதற்கு உறுதுணையாக பல வீரர்கள் விளையாட அவர்களில் முதன்மையானவர் வால்ஸ்கிஸ். லிதுவேனியாவினை சேர்ந்து இவர் அணிக்கு தேவையான வேளையில் கோல்களை அடித்து குவித்தார். இந்த சீசனில் அதிக கோல்கள் (15) அடித்ததற்காக ஐ எஸ் எல் கோல்டன் பூட் விருதினை தட்டிச்சென்றார்.

வால்ஸ்கிஸ்

இந்த சீசன் நிச்சயம் அனைத்து சென்னையின் எப் சி அணியின் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத ஒன்றாகும். அடுத்த சீசனில் இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இந்தமுறை தவறவிட்ட கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story
Share it