திங்கட்கிழமை, மார்ச் 1, 2021
Home அண்மை செய்திகள் ‘பொங்கல் டெஸ்ட்' - 61 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வரலாற்று சிறப்பு நிகழ்வு!

‘பொங்கல் டெஸ்ட்’ – 61 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வரலாற்று சிறப்பு நிகழ்வு!

பொங்கல் டெஸ்டிற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் பிரபலம் அடைந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

பண்டிகை நாட்கள் அல்லது அதற்கு அருகிலுள்ள நாட்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றால் அதனை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். அதுவும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம் பலர் பண்டிகை விடுமுறையில் நேரடியாக கிரிக்கெட் பார்க்க ஆசையுடன் செல்வார்கள். இவ்வாறு பண்டிகை விடுமுறைகளை குறிவைத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த நாடுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் நியூ இயர் மற்றும் பொங்கல் டெஸ்ட் போட்டிகள் இருந்தது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அதிலும் குறிப்பாக முதல் பொங்கல் டெஸ்ட் எப்போது எந்த அணிக்கு எதிராக நடைபெற்றது தெரியுமா?

1960ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக முதல் பொங்கல் டெஸ்ட் நடைபெற்றது. இதில் இந்திய கேப்டனாக ராம்சந்த் இருந்தார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ரிச்சி பெனாட் இருந்தார். இந்த முதல் பொங்கல் டெஸ்ட்டில் இந்திய அணி படு தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. ஒவ்வொரு பொங்கல் டெஸ்ட் போட்டியும் தொடங்குவதற்கு முன்பாக டாஸ் போடும் போது ஸ்டெம்ப் பக்கத்தில் இரண்டு கரும்புகள் நிற்க வைக்கப்பட்டிருக்கும். இவை பொங்கல் டெஸ்ட் என்பதற்கான அடையாளமாக கருதப்படும்.

1988ஆம் ஆண்டு நடைபெற்ற கடைசி பொங்கல் டெஸ்ட் இந்தியாவிற்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. அந்தப் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய நரேந்திர ஹிர்வானி இரு இன்னிங்ஸிலும் தலா 8 விக்கெட் கைப்பற்றி சுழல் மாயஜாலம் நிகழ்த்தினார். தற்போது வரை அறிமுக வீரராக இந்தியாவிற்காக களமிறங்கிய டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் எடுத்த அதிக விக்கெட் இதுவேயாகும்.

அறிமுக வீரராக களமிறங்கிய நரேந்திர ஹிர்வானி இரு இன்னிங்ஸிலும் தலா 8 விக்கெட் கைப்பற்றி சுழல் மாயஜாலம் நிகழ்த்தினார்
அறிமுக வீரராக களமிறங்கிய நரேந்திர ஹிர்வானி இரு இன்னிங்ஸிலும் தலா 8 விக்கெட் கைப்பற்றி சுழல் மாயஜாலம் நிகழ்த்தினார்

இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் டெஸ்ட் போட்டி 1988ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெறவில்லை. மொத்தமாக 1960 முதல் 1988 வரை 12 பொங்கல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன. இதன்பின்னர் பிசிசிஐ தனது டெஸ்ட் மைதானங்களை சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தது. இதனால் ஜனவரி மாதத்தில் சென்னையில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை.

ஆனால் பொங்கல் டெஸ்டிற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் பிரபலம் அடைந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. 1975ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதன்பின்னர் 1981ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அட்டவணையில் இந்தப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் இடம்பெற்று வருகிறது.

இதேபோல மீண்டும் பொங்கல் டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. 61ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அடுத்த ஆண்டு முதல் பொங்கல் டெஸ்ட் நடைபெறும் என்று நாம் நம்புவோம்.

மேலும் படிக்க: சிட்னி டெஸ்டில் விஹாரியுடன் தமிழிலும், பெயினுடன் ஆங்கிலத்திலும் உரையாடி அசத்திய அஸ்வின்!

அரசியல் களத்தில் குதிக்கும் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

மேற்கு வங்காளத்தின் ஹெளரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திவாரி. இவர் 2008-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாட தொடங்கினார். இவரின் அதிரடியான ஆட்டத்திற்காக பல இந்தியர்களின் பாராட்டைப் பெற்றவர். ஆனால் தொடர் காயம் காரணமாக இவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கவில்லை. சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள்...