TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

தமிழக மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி திருமணம்

தமிழக மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி திருமணம்
X
By

Ajanth Selvaraj

Published: 13 Dec 2020 6:16 AM GMT

சென்னையில் கடந்த வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சியில் தனது நீண்டகால காதலியான நேகா கேடேகரினை திருமணம் முடித்தார் தமிழகத்தைச் சேர்ந்த மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி. இந்த ஆண்டு துவக்கத்திலேயே நடக்கவிருந்த இவர்களது திருமணம் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்ட போது வருண் சென்னையிலும் நேகா மும்பையிலும் இருந்ததால் அவர்கள் சந்திக்க முடியாமல் போய்விட்டது.

[embed]https://twitter.com/KKRiders/status/1337788477295869953[/embed]

இந்த நிகழ்வு குறித்து தங்களது டிவிட்டர் பக்கத்தில் வருணின் ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பதிவிட்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் திருமண நிகழ்ச்சிகளின் போது கணவன் மனைவி இருவரும் கிரிக்கெட் விளையாடும் மகிழ்ச்சியான தருணங்களையும் பதிவிட்டுள்ளனர். மண வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் அடி எடுத்து வைக்கும் வருண் சக்ரவர்த்திக்கு கிரிக்கெட் களத்திலும் இந்த வருடம் சிறப்பாகவே அமைந்துள்ளது. தனது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் அனைத்து அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்தார். அத்தோடு ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சு பெர்ஃபார்மன்ஸ் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு பலனாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் விளையாட இடம் பிடித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக அணியில் இருந்து விலக நேரிட்டது. இதிலிருந்து விரைவாக மீண்டு வந்து கிரிக்கெட் களத்தில் மீண்டும் அசத்த வாழ்த்துவோம்.

Next Story
Share it