கிரிக்கெட்
மகளிர் டி-20 உலகக் கோப்பைக்கான நடுவர் பட்டியலில் இடம் பிடித்த ஜி.எஸ் லட்சுமி
மகளிருக்கான டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. பிப்ரவரி
21-ம் தேதி தொடங்கும் இத்தொடருக்கான போட்டி நடுவர்களின் பட்டியலை ஐசிசி
வெளியிட்டுள்ளது
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையான ஜி.எஸ் லட்சுமி,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
23 போட்டிகள் கொண்ட மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடருக்கு மொத்தம் 3 போட்டி
நடுவர்களும், 12 கள நடுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லட்சுமியோடு இணைந்து, லாரென் ஏகன்பாக், கிம் காட்டன், க்ளாரி போலோசாக், சூ ரெட்பெர்ன், ஜாக்குலின் வில்லியம்ஸ் ஆகிய பெண் நடுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்
பிப்ரவரி 21-ம் தேதி நடக்கும் ஆஸ்திரேலியா - இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில்
ஷான் ஜார்ஜுடன், வில்லியம்ஸ் கள நடுவராக செயலாற்ற உள்ளார். சர்வதேச ஆண்கள்
கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது நடுவராக பணியாற்றிய முதல் பெண் இவர் என்பது
குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் இருந்து மற்றொரு நடுவராக நித்தின் மேனன் தேர்வு
செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 22-ம் தேதி நடக்கும் போட்டியில் நித்தின் மேனன் -
போலோசாக் கள நடுவர்களாக இயங்க உள்ளனர். இதே போட்டியில்தான், ஜி.எஸ் லட்சுமி
நடுவராக பணியாற்ற உள்ளார்.
மேலும், லீக் போட்டிகளுக்காக செயலாற்ற இருக்கும் நடுவர்களின் பெயர்கள் மட்டுமே
அறிவிக்கப்பட்டுள்ளது. அரை இறுதி, இறுதி போட்டிகளுக்கான நடுவர்களின் விவரம்
பின்னர் அறிவிப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது
ஐசிசி மகளிருக்கான டி-20 உலகக்கோப்பை
மேட்ச் ரெஃப்ரீ - ஸ்டீவ் பெர்னார்டு, கிறிஸ் பிராட், ஜி.எஸ் லட்சுமி
அம்பயர்ஸ் - லாரன் ஏகன்பாக், கிரெகரி பிராத்வெயிட், கிறிஸ் ப்ரவுன், கிம் காட்டன், ஷான் ஜார்ஜ், நித்தின் மேனன், க்ளாரி போலோசாக், ஆஹ்சன் ராசா, சூ ரெட்பெர்ன், லாங்டன் ருசெரே, அலெக்ஸ் வார்ஃப். ஜாக்குலின் வில்லியம்ஸ்