TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

பிபிஎல்: சென்னையை வீழ்த்தி நார்த் ஈஸ்டன் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

பிபிஎல்: சென்னையை வீழ்த்தி நார்த் ஈஸ்டன் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
X
By

Ashok M

Published: 7 Feb 2020 4:18 PM GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீக் 2020 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு பிபிஎல் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி, நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ் அணி, புனே 7 ஏசஸ் அணி, பெங்களூரு ரப்டர்ஸ் அணி ஆகியவை தகுதிப் பெற்றுள்ளன.

இந்நிலையில் பிபிஎல் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று ஹைதராபாத் நகரின் ஜி.எம்.சி.பாலயோகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியும் நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் கலப்பு இரட்டையர் போட்டி நடைபெற்றது. இதில் சென்னையின் பி.எஸ்.ரெட்டி-ஜெ.புக் இணை நார்த் ஈஸ்டன் அணியின் கே.ஹோ.நா மற்றும் எல்.ஒய்.டே இணையை எதிர்கொண்டது.

பிபிஎல் நார்த் ஈஸ்டன் அணி

இந்தப் போட்டியில் இரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு கேமை வென்றதால் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடந்தது. அதில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்த வண்ணம் இருந்தனர். இறுதியில் நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ் ஜோடி 15-12,9-15,15-14 என்ற கணக்கில் சென்னை ஜோடியை வீழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் சென்னையின் டாமி சுகிராட்டோ நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ் அணியின் லீ யூவை சந்தித்தார். இந்தப் போட்டியின் முதல் கேமை 15-12 என்ற கணக்கில் லீ வென்றார். இரண்டாவது கேமில் இருவரும் சமமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு சமயத்தில் இருவரும் 12 புள்ளிகளுடன் இருந்தனர். எனினும் சிறப்பாக விளையாடிய நார்த் ஈஸ்டன் அணியின் லீ 15-12,15-12 என்ற கணக்கில் சுகிராட்டோவை வீழ்த்தினார். அத்துடன் நார்த் ஈஸ்டன் அணிக்கு 2-0 என்ற முன்னிலையையும் அவர் பெற்று தந்தார்.

பிபிஎல்

இதன்பின்னர் ஆடவர் இரட்டையர் ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டி சென்னை அணிக்கு ட்ரம்ப் கேமாக இருந்தது. இதில் சென்னையின் பி.எஸ்.ரெட்டி-துரூவ் கபிலா ஜோடி நார்த் ஈஸ்டன் அணியின் இசாரா-கரகா இணையை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய இசாரா-கரகா இணை 15-12,14-15,15-10 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. சென்னை அணி தனது ட்ரம்ப் போட்டியில் தோற்றதால் ஒரு புள்ளியை மைன்ஸாக பெற்றது.

பிபிஎல் நார்த் ஈஸ்டன் அணி

இதன்மூலம் 3-(-1) என்ற கணக்கில் நார்த் ஈஸ்டன் அணி சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு ரப்டர்ஸ் அணியும் புனே 7 ஏசஸ் அணியும் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் நார்த் ஈஸ்டன் வாரியர்ஸ் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் மோதவுள்ளது.

Next Story
Share it