திங்கட்கிழமை, ஜனவரி 18, 2021
Home அண்மை செய்திகள் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகும் இந்திய வீரர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகும் இந்திய வீரர்கள்

முன்னனி வீரர்களான ஶ்ரீகாந்த், சாய் பிரனீத் மற்றும் சிந்து ஆகியோர் இந்த தொடரில் விளையாடவுள்ளனர்

உலகெங்கும் அனைவருக்கும் தற்போதுள்ள ஒரே பிரச்சினை கொரோனா வைரஸ் மட்டும் தான். விளையாட்டு வீரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. முக்கிய தொடர்கள் பல ரத்து செய்யப்பட்டுவரும் நிலையில், வீரர்களும் தொடர்களில் இருந்து விலகி வருகின்றனர். மார்ச் 11 தொடங்க இருந்த இந்த தொடரில், ஒற்றையர் பிரிவு வீரர்களான பிரன்னாய், சமீர் வர்மா மற்றும் சவ்ரப் வர்மா ஆகியோர் விலகியுள்ளனர். இவர்களோடு இரட்டையர் பிரிவு வீரர்களான சிராக், சாத்விக் ஜோடி மற்றும் மனு, சுமித் ஜோடியும் விலகியுள்ளது. ஆனால் முன்னனி வீரர்களான ஶ்ரீகாந்த், சாய் பிரனீத் மற்றும் சிந்து ஆகியோர் இந்த தொடரில் விளையாடவுள்ளனர். மேலுமொரு வளர்ச்சியாக ஹைதராபாத்திலுள்ள கோபி சந்த் அகாடமியில் பயிற்சிபெறும் அனைத்து வீரர்களும் பாதுகாப்பு காரணமாக அவரவர் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு டூ வழுக்கு மரம் ஏறுதல் – பொங்கலும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் !

தமிழர் பாரம்பரியங்களுடன் மிகவும் ஒன்று இருக்கும் ஒரு பண்டிகை என்றால் அது பொங்கல் தான். உழவர் திருநாளான இன்று தமிழ் மக்கள் அனைவரும் மதபேதமின்றி தங்கள் வீட்டுகளில் பொங்கல் வைத்து மகிழ்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகையின் போது உழவர்கள் தங்களின் அறுவடைக்கு பிறகு விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று மகிழ்வார்கள். இதற்காக நமது தமிழ் பண்பாட்டில் பல பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன....