சனிக்கிழமை, ஜனவரி 23, 2021
Home அண்மை செய்திகள் பிரேசில் பாரா பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள்

பிரேசில் பாரா பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள்

பிரேசிலில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் தொடரில், 4 தங்கப்பதக்கங்கள், 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் இந்திய அணி அசத்தியுள்ளது.

பிப்ரவரி 10-ம் தேதி முதல் நடந்து வந்த பாரா பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் வீராங்கனைகள் 11 பதக்கங்களை வென்றுள்ளனர். பிரேசிலில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் தொடரில், 4 தங்கப்பதக்கங்கள், 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் இந்திய அணி அசத்தியுள்ளது.

டோக்கியோவில் இந்த ஆண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கிடைத்திருக்கும் வெற்றி மூலம், பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகம் கிடைத்துள்ளது.

ஆண்களுக்கான பிரிவில் இறுதி போட்டியில் நுழைந்த இந்திய வீரர்கள், இரண்டு பதக்கங்களை உறுதி செய்தனர். 22-20, 23-21 என்ற செட் கணக்கில் மனோஜ் சர்க்காரை பகத் தோற்கடித்தார்

பெண்களுக்கான பிரிவில், துருக்கி நாட்டு வீராங்கனை ஹலிமி யில்டிஸிடம் இந்திய வீராங்கனை பரும் பர்மார் தோற்றார். இதனால், பெண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த பிரேம் குமார் – ததியானா கரிவா வெள்ளிப்பதக்கம் வென்றனர். அதே பிரிவில், இந்தியாவின் ராஜ் குமார் – பருல் பார்மர் வெண்கலப் பதக்கம் வென்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில், பகத் – சர்கார் இணை தங்கப்பதக்கம் வென்றனர்.

இதனை தொடர்ந்து, பிப்ரவரி 18-ம் தேதி நடக்க இருக்கும் பெரு பாரா பேட்மிண்டன் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது

விஜய் நடித்த தெலுங்கு ரீமேக் ஸ்போர்ட்ஸ் படத்தின் கதை கரு எங்கிருந்து உருவானது தெரியுமா?

2003ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘ஒக்கடு’. இந்தப் படத்தை குணசேகர் இயக்கியிருந்தார். இந்தப் படம் தமிழில் ‘கில்லி’ என்ற பெயருடன் ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடித்தனர். இப்படம் தமிழில் பெரிய ஹிட்டானது. இந்தச் சூழலில் இந்தப் படத்தின் தெலுங்கு இயக்குநர் குணசேகரன் படத்தின் கதை எப்படி உருவானது என்று தெரிவித்துள்ளார்....