TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

பி.பி.எல் - பெங்களூருவின் வெற்றியை தட்டிப் பறித்த பூனே டபுள்ஸ் இணை

பி.பி.எல் - பெங்களூருவின் வெற்றியை தட்டிப் பறித்த பூனே டபுள்ஸ் இணை
X
By

Karthiga Rajendran

Published: 28 Jan 2020 6:50 AM GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் லக்னோவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில், பூனே 7 ஏஸஸ் அணியும் பெங்களூரு ரப்டர்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பான இந்த டையில், பெங்களூருவின் வெற்றியை தட்டிப் பறித்தது பூனே டபுள்ஸ் இணை

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டையில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டி

முதலில் நடந்தது. பூனேவின் சகாய், பெங்களூருவின் யாதவ் மோதிய இப்போட்டியில் 15-14,

15-9 என்ற செட் கணக்கில் பூனே அணி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றுமொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில்

பூனேவின் லோஹ், பெங்களூருவின் பி.எஸ் பிரணீத் மோதினர். இந்த போட்டியில், 15-10,

7-15, 8-15 என்ற செட் கணக்கில் பெங்களூரு வெற்றி பெற்றது. இதனால், இரண்டு

போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 புள்ளியுடன் களத்தில் இருந்தன.

பி.பி.எல் பிரணீத்

மூன்றாவது போட்டியான பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், பூனேவின் ரித்துபர்னா

தாஸ், பெங்களூருவின் தா சு யிங் மோதினர். பேட்மிண்டன் உலக தரவரிசையில் இரண்டாம்

இடத்தில் இருக்கும் தா சு யிங், 3-15, 9-15 என்ற நேர் செட் கணக்கில் ரித்துபர்னாவை

தோற்கடித்தார். இது டிரம்ப் கேம் என்பதால் பெங்களூரு அணிக்கு இரண்டு புள்ளிகள்

கிடைத்தது. மூன்றாவது போட்டி முடிவில் 1-3 என முன்னிலை வகித்தது பெங்களூரு அணி

வெற்றியை விரட்டிய பூனே டபுள்ஸ் இணை

நான்காவதாக நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், பூனேவின் சிராக் செட்டி - செட்டியாவான் இணை பெங்களூருவின் ஜார்ஜ் - சபுத்ரோ இணையை எதிர்கொண்டது.

பூனே அணிக்கு இது டிரம்ப் கேம் என்பதால், டபுள்ஸ் இணை கவனமாகவும் சிறப்பாகவும்

விளையாடியது. 15-14, 15-3 என்ற செட் கணக்கில் போட்டியை வென்ற பூனே அணி,

புள்ளிக்கணக்கை சமன் செய்தது.

விறுவிறுப்பாக சென்ற இந்த டையில் வெற்றியாளரை தீர்மாணிக்கும் கடைசி போட்டி

நடைபெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியான இதில், பூனேவின் அட்காக் ஜோடி

10-5, 15-11, 15-12 என பெங்களூருவின் சன் - வன் இணையை போராடி வென்றது

இதனால், 4-3 என்ற புள்ளிக்கணக்கில் பூனே அணி பெங்களூருவை வென்றது. இன்று

நடைபெற இருக்கும் போட்டியில் அவாதி வாரியர்ஸ் - மும்பை ராக்கெட்ஸ் அணிகள் மோத

உள்ளனர்.

Next Story
Share it