TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

பேட்மிண்டன்

ஃபார்மில் இருக்கும் சென்னை அணியிடம் வீழ்ந்த மும்பை - பி.பி.எல் அப்டேட்

ஃபார்மில் இருக்கும் சென்னை அணியிடம் வீழ்ந்த மும்பை - பி.பி.எல் அப்டேட்
X
By

Karthiga Rajendran

Published: 23 Jan 2020 1:50 AM GMT

பிரீமியர் மேட்மிண்டன் லீக் ஐந்தாவது சீசனின் மூன்றாவது நாள் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர்ஸ்டார்ஸ், மும்பை ராக்கெட்ஸ் அணிகள் மோதின. லக்‌ஷயா சென், சுகியார்டோவின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணி வெற்றியை ஈட்டியது. ஃபார்மில் இருக்கும் சென்னை அணியிடம் மும்பை அணி வீழ்ந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில் சென்னையின் கபிலா, புக் இணை மும்பையின் ஜூங், பெர்னாடெத்

இணையை எதிர்கொண்டது. இரு அணி வீரர் வீராங்கனைகளும் சிறப்பாக விளையாட போட்டி விறுவிறுப்பாக

சென்றது. இறுதியில், 15-1-, 15-14 என்ற புள்ளிகணக்கில் சென்னை அணி போராடி வென்றது.

முதல் நாள் போட்டியில் அதிரடி காட்டிய லக்‌ஷ்யா சென், இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மும்பையின் கியூனுக்கு எதிரான போட்டியில் 15-12, 15-10 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை ஜெயித்த லக்ஷயா சென் சென்னை அணியை முன்னிலையில் வைத்திருந்தார்.

மற்றுமொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னையின் சுகியார்டோ, மும்பையின்

கஷ்யப் மோதினர். இதுவரை, சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் நேருக்கு நேர் இவர்கள்

மோதியதில் 4-3 என்ற கணக்கில் சுகியார்டோ முன்னிலை வகிக்கிறார். பெரிதும்

எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியின் முதல் செட்டில் கஷ்யப் ஆதிக்கம் செலுத்த,

அடுத்த செட்டை சுகியார்டோ கைப்பற்றினார். அதே முனைப்புடன் மூன்றாவது செட்டை

விளையாட சுகியார்டோ போட்டியில் வெற்றி கண்டார்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில்தான் சென்னை அணிக்கு நேற்று முதல்

தோல்வி. போட்டியின் தொடக்கம் முதலே பி.எஸ் ரெட்டி, கபிலா ஜோடி தடுமாறியது.

இறுதியில், 9-15, 12-15 என்ற

புள்ளிகணக்கில் மும்பையின் ஜங், ரங் ஜோடி போட்டியை வென்றது.

இதைத்தொடர்ந்து நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியிலும் சென்னை

தோல்வியுற்றது. சென்னையின் காயத்ரி கோபிசந்த் மும்பையின் பர்தேசியை எதிர்த்து

களமிறங்கினார். முதல் செட்டை 15-14 என்ற புள்ளிகணக்கில் காயத்ரி முன்னிலை

வகித்தார். ஆனால், அடுத்த செட்களில் ஆதிக்கம் செலுத்திய பர்தேசி போட்டியை

வென்றார்.

இந்த சீசனின் முதல் மற்றும் மூன்றாவது நாள் போட்டிகளில் கண்ட வெற்றியின் மூலம்

சென்னை அணி புள்ளி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. 10 போட்டிகளில், 5 வெற்றி,

2 டிரம்ப் போட்டிகளில் வெற்றி என மொத்தம் 9 புள்ளிகளை பெற்றுள்ளது.

நான்காவது நாளான இன்று, நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் - அவாதே வாரியர்ஸ் அணிகள்

மோத உள்ளனர்.

Next Story
Share it