திங்கட்கிழமை, மார்ச் 1, 2021
Home அண்மை செய்திகள் பாஜகவில் இணைகிறார் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா

பாஜகவில் இணைகிறார் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கவுதம் காம்பீர், சந்தீப் சிங்,யோகேஷ்வர் தத், பாபிதா போகட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் ஏற்கெனவே பாஜகவில் இணைந்துள்ளனர்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பேட்மிண்டன் விளையாட்டில் மிகவும் பிரபலமானவர் சாய்னா நேவால். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

அத்துடன் பேட்மிண்டன் தரவரிசையில் நம்பர் இடத்தையும் சில நாட்கள் தன் வசம் வைத்திருந்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெறும் முன்னைப்பில் சாய்னா நேவால் உள்ளார். இந்நிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாய்னா

ஏற்கெனவே ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கவுதம் காம்பீர், சந்தீப் சிங்,யோகேஷ்வர் தத், பாபிதா போகட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். தற்போது அந்த வழியில் சாய்னா நேவாலும் புதுவரவாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சாய்னா நேவால், “நான் நாட்டிற்காக நிறையே பதக்கங்களை வென்றுள்ளேன். நான் பொதுவாக கடினமாக உழைக்கும் நபர். அதேபோல நமது நாட்டிற்காக பிரதமர் மோடியும் கடினமாக உழைக்கிறார். எனக்கு கடினமாக உழைப்பவர்களை பிடிக்கும். பிரதமர் மோடியிடம் இருந்து நான் பலவற்றை முன்னுதாரணமாக பார்க்கிறேன். நான் பிரதமர் மோடியுடன் இணைந்து நாட்டிற்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

சாய்னா நேவால் பாஜக

வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு முன்பு சாய்னா நேவால் பாஜகவில் இணைந்துள்ளதால் டெல்லி தேர்தலுக்காக பிரச்சாரம் செய்வார் என்று கருதப்படுகிறது. சாய்னா நேவாலுடன் அவருடைய சகோதரி அபு சந்திரான்ஷூவும் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல் களத்தில் குதிக்கும் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

மேற்கு வங்காளத்தின் ஹெளரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திவாரி. இவர் 2008-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாட தொடங்கினார். இவரின் அதிரடியான ஆட்டத்திற்காக பல இந்தியர்களின் பாராட்டைப் பெற்றவர். ஆனால் தொடர் காயம் காரணமாக இவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கவில்லை. சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள்...