திங்கட்கிழமை, ஜனவரி 18, 2021
Home அண்மை செய்திகள் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து மாற்றம் 

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து மாற்றம் 

2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரும் புள்ளிகளை தரும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்த மாதம் சீனாவில் நடைபெற இருந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது அதிகம் இருப்பதால் அங்கு இந்தப் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

இதனால் இந்தப் போட்டி ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் இத் தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், “பிலிபைன்ஸில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அனைத்து வீரர்களும் பங்கேற்க நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

இதற்காக பிலிபைன்ஸ் நாட்டின் பேட்மிண்டன் சங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வரும் பிலிபைன்ஸ் அரசு மற்றும் பேட்மிண்டன் சங்கத்திற்கு எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது. 

ஶ்ரீகாந்த்

இதனை சர்வதேச பேட்மிண்டன் சங்கமும் வரவேற்று உள்ளது. அத்துடன் வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்படும் என உறுதி அளித்தது. கடந்த மாதம் பிலிபைன்ஸின் மணிலாவில் ஆசிய குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. 

இதில் பிலிபைன்ஸ் நாடு விதித்திருந்த 14 நாட்கள் தடை காரணமாக சீனா மற்றும் சீன தைபே அணிகள் பங்கேற்கவில்லை. அந்தத் தடைக் காலம் தற்போது முடிந்து விட்டதால் அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளும் இத் தொடரில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற ஆசிய சாம்பியன்ஷிப் தொடரும் புள்ளிகளை தரும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவமாக கருதப்படுகிறது. குறிப்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற முனைப்பிலுள்ள சாய்னா நேவால் மற்றும் ஶ்ரீகாந்த் ஆகியோருக்கு இத் தொடர் நல்ல வாய்ப்பாக அமையும். 

சிந்து-சாய்னா

கடந்த மாதம் மணிலாவில் நடைபெற்ற ஆசியக் குழு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி பங்கேற்கவில்லை. கொரோனா வைரஸ் காரணமாக இந்திய மகளிர் அணி விலகியது. ஆடவர் அணி மட்டும் அந்தத் தொடரில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 

பேட்ஸ்மென் வாஷிங்டனை அன்றே கணித்த ராகுல் திராவிட்!

வாஷிங்டன் சுந்தர்
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார். இவர் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்பின்னர் நேற்று இந்திய அணியின் பேட்டிங்கில் 7ஆவது விக்கெட்டிற்கு வாஷிங்டனும் தாகூரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அறிமுக வீரராக தனது முதல் இன்னிங்ஸில்...