TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: ஒகுஹாராவிற்கு எதிராகவும் தொடருமா சிந்துவின் வெற்றிப் பயணம் ?

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: ஒகுஹாராவிற்கு எதிராகவும் தொடருமா சிந்துவின் வெற்றிப் பயணம் ?
X
By

Ashok M

Published: 13 March 2020 7:53 AM GMT

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சில வீரர் வீராங்கனைகள் விலகியுள்ளனர். எனினும் பி.வி.சிந்து, சாய்னா நேவால், சாய் பிரணீத் உள்ளிட்ட வீரர்கள் இத் தொடரில் பங்கேற்றுள்ளனர்.

பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷ்யா சென் தவிர இதர இந்தியர்கள் முதல் சுற்று ஆட்டத்திலேயே தோல்வி அடைந்து வெளியேறினர். இந்நிலையில் பி.வி.சிந்து நேற்று தனது 2ஆவது சுற்றில் கொரிய வீராங்கனை சுங் ஜி யுன்னை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய பி.வி.-சிந்து 21-19,21-15 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதன்மூலம் கடந்த 4 போட்டிகளில் முதல் முறையாக சுன் ஜி யுன்னை பி.வி.சிந்து வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகளில் பி.வி.சிந்து சுன் ஜி யுன் இடம் தோல்வி அடைந்துள்ளார். அந்த மூன்று தோல்விகளிலிருந்து மீண்டு இம்முறை அவர் சுன் ஜி யுன்னை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் சிந்து ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை எதிர்கொள்கிறார்.

பி.வி.சிந்து

நசோமி ஒகுஹாராவை தோற்கடித்து தான் 2019ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனை பி.வி.சிந்து வென்றார். அந்தத் தோல்விக்கு ஒகுஹாரா பழி தீர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீரரான லக்‌ஷ்யா சென் தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான விக்டர் அக்ஸில்செனை எதிர்கொண்டார். இப்போட்டியில் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அக்ஸில்செனுக்கு லக்‌ஷ்யா சென் நெருக்கடியை தந்தார்.

லக்‌ஷ்யா சென்

எனினும் 17-21,18-21 என்ற கணக்கில் லக்‌ஷ்யா சென் இப்போட்டியில் தோல்வி அடைந்தார். இதனால் ஆல் இங்கிலாந்து தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை தவிர மற்ற அனைவரும் வெளியேறியுள்ளனர். இந்தியாவின் ஒரே வாய்ப்பாக உள்ள பி.வி.சிந்து இறுதிவரை சென்று பட்டம் வெல்ல வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

இந்தத் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாய்னா நேவால் முதல் சுற்றில் அகேன் யமாகுச்சியிடம் 11-21,8-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தார். இதனால் சாய்னா நேவாலின் ஒலிம்பிக் தகுதி சற்று சிக்கலாகி உள்ளது. எனவே அவர் இனி வரும் தொடரிகளிலிருந்து மொத்தம் 6000-7000 தரவரிசை புள்ளிகளை பெற வேண்டும். சாய்னா நேவால் அடுத்து சுவிஸ் ஓபன், இந்தியன் ஓபன் மற்றும் மலேசிய ஓபன் ஆகிய தொடர்களில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it