லாக்டவுன் அனுபவங்களை பகிரும் முன்னனி டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்

Update: 2020-07-11 08:14 GMT

இந்தியாவின் முன்னனி டேபிள் டென்னிஸ் வீரரான அச்சான்டா சரத் கமல் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வளர்ந்து வரும் வீரர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். தன்னை தொடர்பு கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது, "அனைத்து இளம் வீரர்களையும் இந்த சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுரை கூறினேன். மேலும் ஃபிட்னஸ் மற்றும் ஃபார்ம் குறைந்தாலும் கவலைப்பட வேண்டாம், அவை அனைத்தும் மீண்டும் அடைய போதிய அவகாசம் கிடைக்கும் என்றும் கூறுகிறேன்" என்றார்.

மேலும் அவர் இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மன உறுதி மிகவும் முக்கியம் என்றும் அதற்கான பயிற்சிகள் மிகவும் அவசியம் என்றும் கூறினார். இந்தியாவில் லாக்டவுன் அமல் படுத்தப்பட்டபோது சரத் கமல் சிறப்பான ஃபார்மில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களுக்கு பிறகு ஓமன் ஓபன் தொடரில் பட்டம் வென்றிருந்தார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் முனைப்பில் இருந்தார். ஆனால் இந்த எதிர்பாராத சூழ்நிலையினால் மிகவும் குழப்பம் அடைந்திருந்ததாகவும், அப்போது தான் ஒரு விளையாட்டு வீரரக்கு ஃபிட்னஸ் மற்றுமின்றி மன வலிமையும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தேன் என்றார்.

உலகம் முழுவதும் ஆது ஏற்பட்டுள்ளது, நம்மால் எதனையும் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து தன்னை அமைதிப்படுத்தி கொண்டதாக கூறினார்.மேலும் தற்போது நிலைமை சிறிது சரியானலும் வெளியில் சென்று பயிற்சி செய்யும் முடிவில் இல்லை என்றும் பயிற்சியை விட உடல் ஆரோக்கியமே முக்கியம் எனக் கூறினார். வீட்டினுள்ளேயே முடிந்த வரைக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருவதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.