2020 பிபிஎல் சீசனில் இருந்து வெளியேறிய பி.வி சிந்துவின் ஹைதராபாத் அணி

Update: 2020-02-05 17:25 GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் சென்னை, லக்னோவை தொடர்ந்து ஹைதராபாத்தில்

நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ்

அணிகள் அரை இறுதிக்கு முன்னேறிவிட்டன. ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கில்

நடந்த இன்றைய போட்டியில் ஹைதராபாத் ஹண்டர்ஸ் - பூனே 7 ஏஸஸ் அணிகள் மோதின

முதலில் தொடங்கிய ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், வழக்கம்போல

பூனேவின் சிராக் செட்டி - செட்டியாவான் இணை அசத்தல் வெற்றி பெற்றது. 12-15, 9-15

என்ற நேர் செட் கணக்கில் ஹைதராபாத்தின் லேன் - வெண்டி இணையை தோற்கடித்தது

அடுத்து நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், ஹைதராபாத்தின் ராஜாவத்

போராடி தோற்றார். பூனேவின் மஞ்சுநாத்துக்கு எதிரான போட்டியில் 11-15, 15-11, 13-15

என்ற செட் கணக்கில் ராஜாவத் தோல்வியடைந்தார்

இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டி நடந்தது. இந்த

போட்டியில் 15-7, 15-8 என்ற நேர் செட் கணக்கில் பூனேவின் ரித்துபர்னா தாஸை சிந்து

வென்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூனேவின் அட்காக் இணை இன்று ஏமாற்றம் அளித்தது. ஹைதராபாத்தின் இவானோவ் - என்.எஸ் ரெட்டி 15-9, 11-15, 15-8 என்ற செட் கணக்கில் போட்டியை வென்றது

பி.பி.எல் பூனே 7 ஏஸஸ்

கடைசியாக நடந்த மற்றுமொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், பூனேவின் லோஹ்,

14-15, 10-15 என்ற நேர் செட் கணக்கில் ஹைதராபாத்தின் சவுரப் வெர்வாமை வென்றார்

இதனால் ஐந்து போட்டிகளின் முடிவில் 1-2 என்ற புள்ளிக்கணக்கில் பூனே 7 ஏஸஸ்

வென்றது. இதன் மூலம், பூனே அணியின் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. கடந்த

சீசனில் அரை இறுதி வரை முன்னேறிய சிந்துவின் ஹைதராபாத் ஹண்டர்ஸ் இந்த சீசனில்

நாக்-அவுட் சுற்றில் வெளியேறியுள்ளது

நாளை நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டியில் அவாதி வாரியர்ஸ் - நடப்பு

சாம்பியன் பெங்களூரு ரப்டர்ஸ் மோத உள்ளனர். இந்த போட்டியை பொறுத்தே 2020 பிரீமியர்

பேட்மிண்டன் லீகின் அரை இறுதிக்குள் நுழையப்போகும் நான்காவது அணி எது என்பது

தெரியும்.