இந்தியாவின் முதல் ஆயுர்வேத தொழில்நுட்ப பிராண்டில் முதலீடு செய்துள்ளார் ஜான்டி ரோட்ஸ்

Update: 2020-07-31 10:51 GMT

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில், ஒரு பெயர் எப்பொழுதும் முதன்மையானதாக இருக்கும். அது சவுத் ஆப்பிரிக்க அணியின் ஜான்டி ரோட்ஸ் தான். ஃபீல்டிங் திறமைக்காகவே அணியில் இடம்பிடித்தவர். ஒய்விற்கு பின் கோச்சிங் செய்து வந்தவர் தற்போது பிஸ்னஸ் துறையிலும் கால் பதித்துள்ளார். இந்தியாவின் முதல் ஆன்லைன் ஆயுர்வேத தொழில்நுட்ப பிராண்டான 'வீ ஆர் வெல்னெஸ்' என்ற தொடக்கத்தை அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர் ரஜத் ஷர்மா மற்றும் ஆயுர்வேத மருத்துவர் ஓன்கர் ராஜீவ் பில்கி ஆகியோருடன் இணைந்து உருவாக்கியுள்ளார். 51 வயதான ரோட்ஸ் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

[embed]https://twitter.com/JontyRhodes8/status/1287744340274683904[/embed]

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உதவியுடன் உடல்நலத்தினை ஆயுர்வேத முயற்சிகள் முலம் மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். ஆயுர்வேத பயிற்சிகள் மூலமாக விளையாட்டு சார்பான காயங்களை குணப்படுத்த, உலகளவில் இந்தியாவினை முதன்மையான இடமாக உருவாக்குவதும் இந்த முயற்சியின் லட்சியமாகும். ஆன்லைன் வகுப்புகள் மூலமாக முக்கியமான ஆயுர்வேத வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகளைப் பற்றி கற்றுத்தரப்படும்.