இந்திய நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீரரான சத்யனின் புதிய அணி

Update: 2020-07-28 05:56 GMT

முன்னனி இந்திய டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன் போலந்து நாட்டில் நடக்கவிருக்கும் தொடரில் சோகொலொவ் எஸ் ஏ ஜார்சொஷலாவ் என்ற அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 27 வயதான அவர் இந்ந ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானீஸ் டி லீக் தொடரில் பங்கேற்கும் ஒகயாமா ரிவெட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கே அவர் 12 போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போலிஷ் லீக் செப்டம்பரில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

[embed]https://twitter.com/sathiyantt/status/1285479087494934528[/embed]

ஐரோப்பாவில் இருக்கும் பொழுது தனது திறனை மேலும் உயர்த்தி கொள்ளவே போலந்து லீக்கினில் விளையாட போவதாக பி டி ஐக்கு அளித்த நேர்காணலில் சத்யன் கூறியுள்ளார். மேலும் அவர் தான் போலந்தில் மிகக்குறைந்த ஆட்டங்களிலேயே விளையாட போவதாக கூறினார். அதேபோல் ஜப்பானில் வருடம் முழுவதும் போட்டிகள் நடக்காது என்றும், ஐரோப்பாவில் லீக் போட்ட்கள் நடக்கும் போதும் இங்கு போட்டிகள் நடக்காது எனவும் கூறினார். இதனால் இரண்டு தொடர்களிலும் பங்கெடுப்பதில் எந்த தடங்கலும் இருக்காது. உலகத் தரவரிசையில் 32ஆவது இடத்தில் இருக்கும் சத்யன், போலிஷ் லீக் தொடரில் நடக்கும் போட்டிகள் சவாலானதாக இருக்கும் என நம்புவதாக கூறினார். போலந்தில் சிறப்பான வீரர்கள் இருப்பதாகவும், மேலும் பல ஆசிய வீரர்கள் இங்கு விளையாடுவதாலும் போட்டிகள் கடுமையாக இருக்கும் என்றார்.

மேலும் தான் போலந்தில் ஏற்கனவே விளையாடிய அனுபவம் உள்ளதால், இந்த வாய்ப்பு வந்தவுடன் அதை உடனே ஏற்றுக்கொண்டதாக கூறினார். ஜப்பான் லீக் தொடருக்குத்தான் முதல் முக்கியத்துவம் என்றும், அங்கு போட்டிகள் இல்லாத போது மட்டுமே போலந்து லீக் தொடர் போட்டிகளில் விளையாடுவேன் எனக் கூறிமுடித்தார்.