டேபிள் டென்னிஸ் - இந்திய மகளிர் போராடி தோல்வி, தூரமாகிய ஒலிம்பிக் கனவு!

Update: 2020-01-24 14:25 GMT

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடாருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டேபிள் டென்னிஸ் விளையாட்டை பொறுத்தவரை, இந்திய வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் வாய்ப்பை நெருங்கி வந்தனர். ஆனால், தகுதிச்சுற்று போட்டிகளில் 16 அணிகள் விளையாடிய சுற்றில், ரொமானிய அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது இந்திய மகளிர் அணி. இதனால், இந்திய மகளிரின் ஒலிம்பிக் கனவு தூரமாகியுள்ளது.

இந்தியா மகளிர் - ரொமானியா மகளிர் மோதிய டையில் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டி முதலாவதாக நடைபெற்றது. இந்தியாவின் சுஹிர்தா முகர்ஜி, அயிக்கா முகர்ஜி ஜோடி ரொமானியாவின் டேனியெல்லா மொண்டெய்ரோ, எலிசெபெட்டா சமாரா ஜோடியை எதிர்கொண்டனர். கடைசி செட் வரை நீடித்த இந்த போட்டியில், 10-12, 12-10, 7-11, 11-5, 11-6 என முடிந்தது. போட்டி முடிவில், 3-2 செட் கணக்கில் ரொமானிய மகளிர் வென்றனர்.

மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட ‘டையில்’ முதல் போட்டியை ரொமானிய மகளிர் வென்றதை தொடர்ந்து, அடுத்த போட்டி தொடங்கியது. ஒற்றையர் பிரிவு போட்டியான இதில், இந்தியாவின் மணிக்கா பத்ரா அதிரடியாக விளையாடினார். டேபிள் டென்னிஸ் உலக தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் பெர்ண்டாடேட்டை 11-7, 10-12, 9-11, 7-11 என்ற செட் கணக்கில் வென்றார். இதன் மூலம் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன

அடுத்தடுத்து நடந்த இரண்டு ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இரு அணிகளுக்கும் தலா ஒரு வெற்றி.3-1 என்ற செட் கணக்கில் ரொமானியாவின் எலிசெபெத் சமாராவிடம் அயிக்கா முகர்ஜி தோல்வியுற்றார். ஆனால், அடுத்த போட்டியில் 2-3 என்ற செட் கணக்கில் சுஹிர்தா முகர்ஜி, பெர்ண்டாடேட்டை வென்றார். விறுவிறுப்பாக சென்ற இந்த டையில், 2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் மணிக்கா பத்ரா - டேனியெல்லா

மொண்டேரியோ மோதினர். இந்த போட்டியை மணிக்கா பத்ரா வெல்வார் என்று எதிர்பார்த்தபோது,

போட்டி மாற்றம் கண்டது.கடைசி வரை போராடிய மணிக்கா பத்ரா, 8-11, 4-11, 11-3, 2-11 என்ற செட் கணக்கில்

தோல்வியைத் தழுவினார்.

16 அணிகள் விளையாடும் இந்த சுற்றில், 8 அணிகள் போட்டியைவிட்டு வெளியேறும்.

இப்போது இந்திய மகளிர் வெளியேறியுள்ளனர். இந்த போட்டியை வென்றிருந்தால், ஒலிம்பிக்

போட்டியில் பங்கேற்பது உறுதியாகி இருக்கும். இப்போது தூரமான ஒலிம்பிக் கனவை

மீண்டும் துரத்திப்பிடிக்க, இந்திய மகளிருக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு உள்ளது.

நாக் அவுட் பிரிவில் இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. நாக் அவுட்டின்

முதல் சுற்றில் பிரான்சு அணியை எதிர்கொள்ள நேரிடும். இதில் வெற்றி பெற்றால், நெதர்லாந்து

அல்லது போர்சுகல் அணியை எதிர்கொள்ள வேண்டும். இரண்டாவது போட்டியையும் வென்றால்,

தென் கொரியா அணியை எதிர்கொண்டு ஜெயிக்க வேண்டும். நாக் அவுட் சுற்றில் இந்திய

அணியைவிட பலம் வாய்ந்து அணிகளுடன் மோத வேண்டும் என்பதால், அதில் வெற்றி பெறுவது

கடினமே! தற்போதைய நிலையில், இந்திய மகளிரின் 2020 ஒலிம்பிக் கனவு வெகு

தூரமாகியுள்ளது.