இந்திய தடகள நட்சத்திரம் சித்ரா... ஒலிம்பிக் கனவை நோக்கி..!

Update: 2020-01-17 14:10 GMT

2018 ஆசிய போட்டிகளுக்கு பிறகு விளையாட்டு உலகின் கவனத்தை ஈர்த்தவர் கேரளாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.யூ சித்ரா. மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றவர், தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். 2019-ம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 1500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்திய இரயில்வே துறையில் பணியாற்றி வரும் இந்திய தடகள நட்சத்திரம் சித்ரா வின் அடுத்த இலக்கு, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி.

Asian Athletics Championships - Khalifa International Stadium, Doha, Qatar - April 24, 2019 India's Chitra Palakeezhunnikirshnan celebrates after the Women's 1500m Final REUTERS/Ibraheem Al Omari - RC1870A1D930

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தனது விளையாட்டில் தொடர்ந்து முன்னேற்றம்

காண்பித்து வருகிறார் சித்ரா. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 6

மாதங்களே உள்ள நிலையில், அதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளில் கவனம் செலுத்தி

வருகிறார் அவர்.

2019-ல் கத்தார் தலைநகரம் தோஹாவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற அவர், 1500 மீட்டர் ஓட்டப்பிரிவில் 4:11.10s நேரத்தில் கடந்து 30-வது இடத்தையே பிடித்தார். இதுவே அவரது சிறந்த பெர்ஃபாமன்ஸ் ஆகும்.

800 மீட்டர் ஓட்டத்தைப் பொறுத்தவரை, 2:02.96s நேரத்தில் பந்தய தூரத்தை கடந்ததே அவரது சிறப்பான ஓட்டமாகும். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவதற்கான கட்டத்தில், 1500 மீட்டர் ஓட்டத்தை 4:04.20s நேரத்திலும், 800 மீட்டர் ஓட்டத்தை 1:59.50s நேரத்திலும் கடந்திட வேண்டும்.

இது குறித்து பேசிய தடகள வீராங்கனை சித்ரா, “ஒலிம்பிக் தகுதிச்சுற்று பொறுத்தவரை, 1500 மீட்டர் ஓட்டத்தில் தேர்ச்சி பெறுவதே கடினமே. ஆனால், 800 மீட்டர் ஓட்டத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் கடந்துவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்

இந்தியாவின் கவனிக்கத்தக்க தடகள வீராங்கனைகளில் ஒருவராக உருவாகி இருக்கும் சித்ராவின்

ஆரம்ப காலம் அவ்வளவு எளிதாக இருந்திடவில்லை. கேரளா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த

உன்னிகிருஷ்ணன், வசந்தா குமாரி தம்பதிகளின் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர் சித்ரா.

மூத்த சகோதரிகள் இருவரும், தம்பி ஒருவரும் இருக்கும் சித்ராவின் குடும்பம் அவ்வளவு

வசதியானது இல்லை.

பாலக்காட்டில் உள்ள பள்ளிக்கூடத்தில் கல்வி கற்று வந்தபோதுதான் சித்ராவுக்கு

தடகளத்தின் மீதான காதல் மலர்ந்துள்ளது. “ஒரு வேளை உணவுக்கே பிரச்னையாக இருக்கும்

குடும்பத்தில் இருந்து தடகளத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது

பள்ளிக்கூடத்தில்தான். பள்ளியில் படித்து வந்த மூத்த மாணவ மாணவிகள் பதக்கங்களை

அள்ளி வருவதை பார்த்து எனக்கும் தடகளம் விளையாட வேண்டும் என்ர ஆசை வந்தது. பிறகு, ஒன்பதாம்

வகுப்பு முதல் நானும் பதக்கங்களை குவிக்க ஆரம்பித்தேன்” என்கிறார் சித்ரா.

பாலக்காட்டில் தொடங்கிய சித்ராவின் பதக்க கனவு டோக்கியோவை சென்றடையுமா என்கிற

கேள்விக்கு பதில் சொல்கிறார் சித்ராவின் பயிற்சியாளர் பாடியா. “வரும் சில மாதங்களில்

இன்னும் சில போட்டிகளில் சித்ரா பங்கேற்க உள்ளார். இதில் சிறப்பாக விளையாடும்

பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புகள் உண்டு. நம்பிக்கை

வைத்திருக்கிறோம்” என்றார்.

பதக்க கனவு நிறைவேற வாழ்த்துக்கள் சித்ரா!