ஒலிம்பிக் இந்தியத் தூதராக கங்குலி - இந்திய ஒலிம்பிக் சங்கம் அழைப்பு

Update: 2020-02-02 15:16 GMT

2020 ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் தொடங்க

உள்ளது. ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில்,

ஒலிம்பிக் தொடருக்கான இந்திய தூதராக இருக்க வேண்டி, பிசிசிஐ தலைவர் சவுரவ்

கங்குலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான செய்தியில், இந்திய ஒலிம்பிக் சங்கச் செயலாளர் ராஜீவ்

மேஹ்தா, கங்குலிக்கு அழைப்புக் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

“2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக நீங்கள் இருக்க வேண்டி இந்திய ஒலிம்பிக் சங்கம் விரும்புகிறது. இந்திய அணிக்கு உங்களது ஆதரவு இருக்கும் என நம்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், “கோடிக்கணக்கான மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களின் நம்பிக்கை

நட்சத்திரமாக இருக்கிறீர்கள். 2020 ஒலிம்பிக் தொடருக்கு இந்திய அணிக்கு உங்களது

ஆதரவு உத்வேகம் தரும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதன் மூலம், இந்திய அணி தனது முதல்

ஒலிம்பிக்கில் பங்கேற்று நூறாவது ஆண்டை நிறைவு செய்யப்போகிறது. அதிகபட்சமாக 2012

ஒலிம்பிக்ஸ் தொடரில்  6 பதக்கங்களை வென்ற

இந்திய அணி, ஒரு தங்கப்பதக்கத்தையும் பெறவில்லை. இந்த ஆண்டு இந்திய அணி அதிக

பதக்கங்களை வென்று வருமா என தெரிந்து கொள்ள காத்திருப்போம்.

இதுவரை, 63 இந்திய வீரர வீராங்கனைகள் 2020 ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ளனர். இனி, தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருவதால், இன்னும் சிலர் தகுதிப் பெற வாய்ப்புள்ளது.