சீனாவை மிரட்டும் கொரோனா வைரசால் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து

Update: 2020-01-23 17:04 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் உலகின் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், சீனாவை மிரட்டும் கொரோனா வைரசால் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் ‘கெரோனா’ வைரஸ் பரவு வருகிறது. இந்த வைரஸ் நோய் தாக்குதலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர், 500-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரில் பொது வாகங்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வுஹான் நகரத்துக்கும் வெளிநாடுகளுக்கும் இருக்கும் விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.

வைரஸ் தாக்குதலால் வுஹான் நகரத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், பிப்ரவரி

3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்க இருந்த குத்துச்சண்டை தகுதிச்சுற்று

போட்டிகளை ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு அறிவித்துள்ளது. நோய்

பரவும் அபாயம் உள்ளதால், 2020 ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளை வுஹான் நகரத்தில்

நடத்த இயலாது என அறிவித்துள்ளது.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய குத்துச்சண்டை ஆணையம் முன்வந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள இந்திய குத்துச்சண்டை ஆணையத்தின் தலைவர் அஜய் சிங் கூறியதாவது, “ரத்து செய்யப்பட்ட ஒலிம்பிக் தொடருக்கான குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி தந்தால், அதை ஏற்று நடத்த நாங்கள் தயார். புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி மைதான வளாகத்தின் கே.டி ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் போட்டிகளை நடத்த அனுமதி கேட்போம். இங்கேதான் 2018-ம் ஆண்டில் ஏ.ஐ.பி.ஏ எலைட் மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்றது. எனவே இந்தியாவில் நடத்த அனுமதி அளிக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்

அஜய் சிங்கின் இந்த யோசனைக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது.