ஐபிஎல் நடக்கும் அதே நேரத்தில் மகளிருக்கான டி-20 கிரிக்கெட் சாலஞ்ச் ஆரம்பம்

Update: 2020-03-01 13:52 GMT

2020 மகளிருக்கான டி-20 சாலஞ்ச் கோப்பை ஜெய்பூரில் நடைபெறும் என்பதை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெறும் அதே நேரத்தில், மகளிருக்கான டி-20 சாலஞ்ச் போட்டிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு மூன்று அணிகள் இத்தொடரில் பங்கேற்றிருந்தன. சூப்பர்னோவாஸ், டிரயல்ப்ளேசர்ஸ், வெலோசிட்டி என மூன்று அணிகள் ஏற்கனவே உள்ளன. இம்முறை, புதிதாக ஓர் அணி சேர்க்கப்பட்டுள்ளது. ஜெய்பூர் சுவாமி மன் சிங் மைதானத்தில், மொத்தம் 7 போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மகளிருக்கான டி-20 சாலஞ்ச் தொடர் இரண்டு சீசனை எட்டியுள்ளது. இதில், இரண்டு முறையும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.

கடந்த சீசனில், உள்ளூர் வீராங்கனைகளும், வெளிநாட்டு வீராங்கனைகளையும் சேர்த்து மொத்தம் 39 கிரிக்கெட் வீராங்கனைகள் இத்தொடரில் பங்கேற்றிருந்தனர். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்த இத்தொடர், இம்முறை அதிக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு நிகரான சுவாரஸ்யம் மகளிர் கிரிக்கெட்டிலும் உள்ளது என்பதை கடந்த சீசன் இறுதிப்போட்டியிலேயே தெரியப்படுத்தினர் கிரிக்கெட் வீராங்கனைகள்.