"உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் கனவை வார்த்தைகளால் கூற முடியாது"- ஜெமிமா ரோட்ரிக்ஸ்

Update: 2020-01-22 16:46 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இந்திய மகளிர் அணி மோதவுள்ளது. இதற்காக இந்திய வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய மகளிர் அணி ஜனவரி 31ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில்

இந்திய உலகக் கோப்பை அணியில்

இடம்பெற்றுள்ள 19வயதான

இளம் வீராங்கனை ஜெமிமா

ரோட்ரிக்ஸ் உலகக் கோப்பை

குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து

அவர்,

“உலகக்

கோப்பை தொடருக்கான பயிற்சிகள்

தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தத்

தொடருக்கு முன்பாக நாங்கள்

முத்தரப்புத் தொடரில் பங்கேற்க

உள்ளதால்,

அது

எங்களுக்கு நல்ல பயிற்சியாக

அமையும்.

என்னுடைய

பேட்டிங்கில் சிறிய மாற்றங்களை

செய்ய பயிற்சி செய்து வருகிறேன்.

குறிப்பாக

பேக் ஃபூட் ஆட்டத்தில் அதிக

கவனம் செலுத்தி வருகிறேன்.

அத்துடன்

பேட்டின் ஸ்பீடை அதிகமாக்கவும்

முயற்சி செய்தி வருகிறேன்.

ஏனென்றால்

என்னைப் போல உயரம் குறைவாக

உள்ள வீராங்கனைகள் அதிக

பலத்துடன் பந்தை சிக்சருக்கு

அடிக்க இயலாது.

அதனால்

தான் இந்தப் பயிற்சியை

மேற்கொண்டு வருகிறேன்.

எப்போதும்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக

விளையாடுவது எனக்கு மிகவும்

பிடிக்கும்.

ஆஸ்திரேலியாவிற்கு

எதிராக விளையாடும் போது

உங்களுடைய சிறப்பான ஆட்டத்தை

வெளிப்படுத்த வேண்டும்.

அப்படி

இல்லை என்றால் ஆஸ்திரேலிய

அணியினர் நம்மை எளிதில்

வீழ்த்தி விடுவார்கள்.

ஆகவே

அந்த அணியுடன் விளையாடும்

போது ஆட்டத்தின் தரத்தை

உயர்த்த வேண்டும்.

நாங்கள்

எங்கு சென்றாலும் அங்கு அதிக

ரசிகர்கள் வந்து எங்களுக்கு

ஆதரவு தருகின்றனர்.

அதேபோல

இந்த உலகக் கோப்பை தொடருக்கும்

அதிகமாக அளவில் இந்திய ரசிகர்கள்

வருவார்கள் என நம்புகிறேன்.

உலகக்

கோப்பை தொடரில் ஒரு நாள்

விளையாட வேண்டும் என்பது

என்னுடைய கனவு.

அதிலும்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்

விளையாட வேண்டும் என்ற என்னுடைய

கனவை வார்த்தைகளால் கூற

முடியாது.

ஆகவே

மற்ற வீராங்கனைகள் போல் நானும்

மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்.

இந்தத்

தொடரில் சிறப்பாக விளையாடி

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்

விளையாட வேண்டும் என்ற எனது

கனவை நான் நிஜமாக்குவேன்”

எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இடம்பெற்று இருந்தார். அந்தத் தொடரில் இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் இவர் மூன்றாம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்தியாவிற்காக 34 டி20 போட்டிகள் மற்றும் 16 ஒருநாள் போட்டிகள் தற்போது வரை விளையாடி உள்ளார்.