எதற்காக தமிழில் யூடியூப் செனல்? - மனம் திறந்த அஸ்வின்

Update: 2021-02-09 04:56 GMT

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அத்துடன் 100ஆண்டுகளுக்கு இன்னிங்ஸின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவரின் ஆட்டம் குறித்தும் இந்தியாவின் வாய்ப்பு குறித்தும் தெரிவித்தார். மேலும் அப்போது அவரின் யூடியூப் செனல் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் அஸ்வின் பதிலளித்தார்.

Full View

அதில், “தமிழ்நாட்டில் கிரிக்கெட் விரும்பும் ரசிகர்களிடம் அவர்களின் மொழியில் யாரும் பேசுவதில்லை. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பலர் கிரிக்கெட் குறித்து பேசி வருகின்றனர். ஆனால் தமிழில் சிலர் மட்டுமே உள்ளனர். எனவே அவர்கள் விரும்பும் விளையாட்டை அவர்களின் மொழியில் பேசவே நான் தமிழில் யூடியூப் செனலை தொடங்கினேன்” எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாமல் யூடியூப் தளத்திலும் அஸ்வின் கலக்கி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கி இந்தப் பயணம் ஐபிஎல், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களின் போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. யூடியூப் தளத்திலும் அஸ்வின் தவிர்க்க முடியாத ஒரு நபராக உருவெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘அஸ்வினும் சென்னையும்’- 2012க்கு பிறகு சென்னை டெஸ்டில் நடந்த அதே நிகழ்வு!