ஐபிஎல்: வருண் டூ பும்ரா’-2020 தொடரின் டாப்-5 சிறந்த ஸ்பெல்கள் !

Update: 2020-11-06 02:47 GMT

ஐபிஎல் தொடரின் முதல் பிளேஆஃப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. அத்துடன் 6ஆவது முறையாக மும்பை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் டாப் 5 சிறந்த பந்துவீச்சு ஸ்பெல்கள் என்னென்ன?

  1. லாக்கி பெர்குசன் 3/15 vs சன்ரைசரஸ்

கொல்கத்தா-சன்ரைசரஸ் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் லாக்கி பெர்குசன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இவர் 15 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோரை சன்ரைசர்ஸ் சமன் செய்தது. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் வீசிய பெர்குசன் அதிலும் 2 விக்கெட் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றிப் பெற முக்கிய காரணமாக அமைந்தார்.

  1. முகமது சிராஜ் 3/8 vs கொல்கத்தா:

பெங்களூரு-கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி முதலில் பந்துவீசியது. அந்தப் போட்டியில் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இவர் வெறும் 8 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியது சிறப்பானதாக அமைந்தது.

  1. பும்ரா 4/14 vs டெல்லி:

மும்பை-டெல்லி அணிகள் இடையே நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் மும்பை அணி அசத்தலாக விளையாடி வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா டி20யில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் நடப்பு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்து பும்ரா அசத்தினார்.

  1. 3/7 ரஷீத் கான் vs டெல்லி:

சன்ரைசர்ஸ்-டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 219 ரன்கள் அடித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங்கை ரஷீத் கான் பதம் பார்த்தார். இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ரஷீத் கான் வெறும் 7 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார். ரஷீத் கானின் பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது. இது ஐபிஎல் வரலாற்றில் மிகவும் எக்னாமிகல் ஸ்பெலாக அமைந்தது.

வருண் சக்ரவர்த்தி

  1. வருண் சக்ரவர்த்தி 5/20 vs டெல்லி

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் வருண் சக்ரவர்த்தி தான். இவர் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் இந்த சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். இந்த ஸ்பெலின் மூலம் வருண் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார்.

மேலும் படிக்க: ஐபிஎல்: லீக் சுற்றில் மறக்க முடியாத டாப் 5 போட்டிகளின் ஃபிளாஷ்பேக்