பட்ஜெட் உரையில் இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டிய நிர்மலா சீதாராமன்!

Update: 2021-02-01 07:51 GMT

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை இந்திய கிரிக்கெட் அணி வெற்றியுடன் முடித்தது. குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பிறகு இந்திய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்றது. அதன்பின்னர் மூன்றாவது டிரா செய்து நான்காவது போட்டியில் வெற்றிப் பெற்று அசத்தியது. அத்துடன் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று இந்திய அணி சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய அணியின் வெற்றியை பாராட்டினார். இதுதொடர்பாக, “கிரிக்கெட் விளையாட்டை மிகவும் விரும்பும் நாம், அண்மையில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடினோம். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை வெற்றிப் பெற்றது சிறப்பானதாக இருந்தது.இந்த வெற்றி நமது மக்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு இருக்கும் சாதிக்கும் வெறியை தெளிவாக உணர்த்தியது.” எனத் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மக்களின் குரல்’ நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பாராட்டு தெரிவித்தார். இதற்கு பிசிசிஐயும் பிரதமருக்கு நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘கப் முக்கியம் பிகிலு’- தினேஷ் கார்த்திக் பயன்படுத்திய ட்ரம்ப் கார்டு மணிமாறன் சித்தார்த் – யார் இவர்?