ஜெர்மன் செஸ் தொடரில் அசத்திய தமிழக செஸ் வீரர் இனியன்

Update: 2020-01-18 12:51 GMT

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் விளையாட்டு வீர்ர் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவது மட்டுமின்று உலகில் நடைபெறும் பல்வேறு செஸ் தொடர்களிலும் இந்திய வீரர் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர். சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டாஃபர் ஓபன் செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார் தமிழக செஸ் வீரர் இனியன் பன்னீர்செல்வம்

15 நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதில், இரண்டு போட்டிகளை ‘டிரா’ செய்து, ஆறு போட்டிகளில் வெற்றி பெற்ற மொத்தம் 7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்

கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஈரோட்டைச் சேர்ந்த இனியன், இந்தியாவின் 61-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக சாதனைப்படைத்தார். 1 6 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றா அவர், சிறு நகரிலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

2019 மார்ச் 6-ம் தேதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கான 2,500 புள்ளிகளையும் பெற்றார் அவர்.

தன்னுடைய செஸ் பயணம் குறித்து பேசிய அவர், "‘சர்வதேச செஸ் பட்டியலில் முன்னேற வேண்டும் என நினைக்கிறேன். அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். பெருநகரங்களில் மட்டுமன்றி, மற்ற ஊர்களிலிருந்தும் செஸ் விளையாட்டுக்கு இளம் வீரர்கள் வர வேண்டும். செஸ் பழகப் பழக சுவாரஸ்யமாகும். பயிற்சி எடுத்தால் நீங்களும் கிராண்ட் மாஸ்டர் ஆகலாம்” என்கிறார் உற்சாகமாக!