தமிழக இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்

Update: 2020-10-06 02:58 GMT

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் எம்.பி.ராஜேஷ்(33). இவர் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். அந்தத் தொடரில் இவர் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இவரின் சிறப்பான பந்துவீச்சு அணியை பல முறை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளது.

இந்நிலையில் நேற்று திடீரென மாரடைப்பால் எம்.பி.ராஜேஷ் உயிரிழந்தார். அவரின் மறைவு தமிழக கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷின் திடீர் மரணம் தொடர்பாக அவரது நெருங்கிய நண்பரும் இந்திய வீரருமான ரவிசந்திரன் அஸ்வின் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜேஷ் இறந்துவிட்டான் என்பதை நம்ப முடியவில்லை. போட்டிகளுக்கு பிறகு அவனுடன் நடத்திய உரையாடல்கள் தற்போது எனது நினைவிற்கு வருகின்றன. அவனுடய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

ராஜேஷின் மறைவிற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பிலும் இறங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ராஜேஷ் யு-16 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு அணி, யு-19 தமிழ்நாடு அணி ஆகியவற்றில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஐபிஎல் சம்பளத்தில் ‘நூறு கோடி’யை தொட்ட மூன்று வீரர்கள் யார் தெரியுமா?