ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்ற தமிழ்நாட்டின் இளவேனில்!

Update: 2020-12-10 10:24 GMT

இந்திய தொழில் சங்ககளின் கூட்டமைப்பான எஃப்.ஐ.சி.சி ஆண்டு தோறும் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் 2019-20 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனை விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஆடவர் பிரிவில் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வென்றார். மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார்.

இந்த விருது பெற்றது தொடர்பாக இளவேனில், “இந்த விருதை வெல்வதற்கு காரணமாக எனது குடும்பத்திற்கு முதல் நன்றி. என்னுடைய பயிற்சியாளர் நேஹாவிற்கும், ஆலோசகர் ககன் நரங் சாருக்கும் எனது மரியாதை கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இக்கட்டான சமயங்களில் எனக்கு உதவிய தேசிய ரைஃபிள் சங்கத்திற்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்” எனக் கூறினார்.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்று இளவேனில் அசத்தியிருந்தார். அத்துடன் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றும் அசத்தியிருந்தார். அதேபோல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார்.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்”- கோலியிடம் கூறிய ரசிகர்கள்