சாதி ஒடுக்குமுறையை உடைத்து சாதித்த இந்தியாவின் முதல் பட்டியலின கிரிக்கெட் வீரர் பல்வான்கர்

Update: 2020-10-06 11:10 GMT

விளையாட்டு உடன் எப்போது பெரிதும் சாதி உள்ளிட்ட பிரச்னைகளை சேர்த்து பார்ப்பது இயல்பான ஒன்று அல்ல. ஏனென்றால் விளையாட்டில் ஒருவரை தேர்வு செய்ய அவரது திறமையை மட்டுமே காரணமாக இருக்கும். மதம்,மொழி,சாதி, இனம் ஆகியவை அனைத்தும் பார்த்து வீரர் வீராங்கனைக்கு வாய்ப்புகள் வருவதில்லை.

எனினும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்தப் போது இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறைகள் மிகவும் தீவிரமாக இருந்தன. அந்த சமயத்தில் கிரிக்கெட் விளையாட்டிலும் சாதிய பாகுபாடுகள் அதிகம் இருந்து வந்தன. இந்தப் பாகுபாடுகளை உடைத்த முதல் பட்டியலின வீரர் பல்வான்கர் பாலு. இவர் புனேவிற்கு அருகே உள்ள தார்வாட் பகுதியில் 1875 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவரது குடும்பத்தினர் தோல் வேலை தொடர்பான தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். பல்வான்கர் மற்றும் அவரது சகோதரர் சிவ்ராம் கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டனர். 1893ஆம் ஆண்டில் ஹிந்து, இஸ்லாம், பிரிட்டிஷ் ஆகிய அணிகள் கிரிக்கெட் விளையாடி வந்தனர்.

அந்தசமயத்தில் ஹிந்து அணி நல்ல பந்துவீச்சாளர் இல்லாமல் தவித்து வந்தது. அப்போது அவர்களுக்கு நல்ல பந்துவீச்சாளராக திகழந்தவர் பல்வான்கர். எனினும் பல்வான்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்பதால் முதலில் இவரை எடுக்க ஹிந்து அணியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பை தனது திறமையால் பல்வான்கர் தகர்த்தார்.

இதன்காரணமாக 1896ஆம் ஆண்டு அப்போதைய பிரபலமான ஹிந்து ஜிம்கானா அணியில் பல்வான்கர் இடம்பெற்றார். அந்த அணியில் சிறப்பாக விளையாடிய பல்வான்கர் பிரிட்டிஷ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5விக்கெட்களை வீழ்த்தி ஹிந்து அணியை வெற்றிப் பெற செய்தார். அப்போது இந்தியாவின் வில்ஃபெர்ட் ரோட்ஸ் என்று பல்வான்கர் அழைக்கப்பட்டார்.

பல்வான்கர் குறித்து இந்திய வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா, “சாதிய ஒடுக்குமுறைகளை தகர்த்த மிக சிறப்பான கிரிக்கெட் வீரர் பல்வான்கர்” எனத் தனது புத்தக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்த சாதிய ஒடுக்குமுறையை உடைத்து அப்போதே ஒடுக்கப்பட்ட சமூதாயத்திற்கு ஒரு தலைவராக திகழ்ந்தவர் பல்வான்கர். பல்வான்கர் இங்கிலாந்து சென்று சிறப்பாக விளையாடி திரும்பிய போது அவரை வரவேற்க நடைபெற்ற கூடத்தில் அம்பேத்கர் தொடக்க உரையை நிகழ்த்தியது மிகவும் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று. விளையாட்டில் நிலவிய சாதிய ஒடுக்குமுறையை உடைத்த கிரிக்கெட் வீரர் நாம் பாராட்டி நினைவு கூறவதே அவரின் சிறப்பிற்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

மேலும் படிக்க: தடைகளை வென்று சாதனைப் படைத்த சின்னப்பம்பட்டி ‘யார்க்கர்’ நாயகன் நடராஜன்