ஆஸ்திரேலியன் ஓபன்: காயம் காரணமாக சானியா மிர்சா மகளீர் இரட்டையர் போட்டியிலிருந்து விலகல்

Update: 2020-01-23 09:09 GMT

ஆஸ்திரேலியன்

ஓபன் தொடரில் மகளீர் இரட்டையர்

பிரிவில் இந்தியாவின் சானியா

மிர்சா மற்றும் உக்ரேன்

நாட்டின் நாடியா ஜோடி

களமிறங்கியது.

இந்த

ஜோடி முதல் சுற்றில் சீனாவின்

சின்யூன் ஹன் மற்றும் லின்

சூ இணைய எதிர்கொண்டது.

இந்தப்

போட்டியில் முதல் செட்டை

சானியா ஜோடி 2-6

என்ற

கணக்கில் இழந்தது.

இதனைத்

தொடர்ந்து முதல் செட்டின்

முடிவில் சானியா மிர்சா

மருத்துவ சிகிச்சைக்கு அவகாசம்

பெற்றார்.

பின்னர்

சிகிச்சை பெற்று இரண்டாவது

செட்டில் பங்கேற்றார்.

இரண்டாவது

செட்டின் முதல் கேம்மை சீனா

ஜோடி கைப்பற்றியது.

அப்போது

மிகவும் தடுமாறிய சானியா

காயத்தால் போட்டியிலிருந்து

விலகுவதாக அறிவித்தார்.

இதனால்

சீன ஜோடி இரண்டாவது சுற்றிற்கு

முன்னேறியுள்ளது.

இரண்டரை

வருடங்களுக்கு சானியா தான்

பங்கேற்ற முதல் கிராண்ட்ஸாம்

தொடரில் முதல் சுற்றிலேயே

காயம் காரணமாக வெளியேறியது

ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை

அளித்துள்ளது.

ஏற்கெனவே

நேற்று கலப்பு இரட்டையர்

பிரிவிலிருந்து சானியா மிர்சா

விலகி இருந்தார்.

அப்போது

மகளீர் இரட்டையர் பிரிவில்

கவனம் செலுத்த போவதாக

தெரிவித்திருந்தார்.

கடந்த

வாரம் ஆஸ்திரேலியாவில்

நடைபெற்ற ஹோபார்ட் ஓபன்

தொடரில் சானியா-நாடியா

ஜோடி சாம்பியன் பட்டத்தை

வென்று இருந்தது.

இரண்டரை

வருட இடைவேளிக்குப் பிறகு

மீண்டும் தனது டென்னிஸ்

பயணத்தை சானியா மிர்சா

வெற்றியுடன் துவக்கினார்.

அதே

ஃபார்மை நடப்பு ஆஸ்திரேலியன்

ஓபன் தொடரிலும் காட்டி சானியா

அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தச்

சூழலில் சானியாவின் விலகல்

இந்திய ரசிகர்களுக்கு பெரும்

வருத்தமாக மாறியுள்ளது.

ஏற்கெனவே இந்திய வீரர்கள் பிரஜ்னேஷ், போபண்ணா ஆகியோர் தங்களது போட்டிகளில் தோல்வி அடைந்து ஆஸ்திரேலியன் ஓபனிலிருந்து வெளியேறினர். இதனால் சானியா மிர்சா அசத்தி இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளிப்பார் என்று கருதப்பட்டது. எனினும் மற்றொரு இந்திய வீரரான திவிஜ் சரண் மட்டும் இன்னும் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் விளையாட உள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜாம்பவான் வீரர் லியாண்டர் பயஸிற்கு வைல்டு கார்டு முறையில் விளையாட தகுதி அளிக்கப்பட்டுள்ளது. லியாண்டர் பயஸ் 2017ஆம் ஆண்டு பிரான்ஸ் ஓபன் சாம்பியன் ஜெலினா ஓஸ்டாபென்கோவுடன் விளையாட உள்ளார். இவர்கள் இருவரும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சண்டரஸ் மற்றும் போல்மன்ஸ் ஜோடியை எதிர்கொள்ள உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான போபண்ணா நாடியாவுடன் இணைந்து இரண்டாம் நிலை ஜோடியான நிகோலஸ் மஹூட்- சுவை சாங் இணையை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.