10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தரவரிசையில் சாய்னாவிற்கு பின்னடைவு; பறிபோகுமா சாய்னாவின் ஒலிம்பிக் கனவு?

Update: 2020-01-22 03:32 GMT

இந்திய

பேட்மிண்டனின் நட்சத்திர

வீராங்கனை சாய்னா நேவால்.

இவர்

கடந்த சில மாதங்களாக பேட்மிண்டன்

போட்டிகளில் பின்னடைவை

சந்தித்து வருகிறார்.

இந்நிலையில்

தற்போது வெளியாகியுள்ள

பேட்மிண்டன் தரவரிசையிலும்

சாய்னா நேவாலுக்கு பின்னடைவு

ஏற்பட்டுள்ளது.

அதாவது

கடந்த 10ஆண்டுகளில்

இல்லாத அளவிற்கு சாய்னா கடும்

சரிவை சந்தித்துள்ளார்.

அதன்படி

நேற்று வெளியான தரவரிசைப்

பட்டியலில் சாய்னா நேவால்

18ஆவது

இடத்தை பிடித்துள்ளார்.

கடைசியாக

கடந்த 2017ஆம்

ஆண்டு சாய்னா நேவால் தரவரிசையில்

16ஆவது

இடத்தை பிடித்திருந்தார்.

எனினும்

சில மாதங்களுக்குள் சிறப்பான

ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்

மீண்டும் டாப்-10

இடங்களுக்குள்

முன்னேறினார்.

படம்: BWF பேட்மிண்டன்

கடந்த

வருடம் சாய்னா நேவால் ஒரே

ஒரு பேட்மிண்டன் தொடரை மட்டுமே

வென்று இருந்தார்.

அதன்பின்னர்

நடைபெற்ற தொடர்களில் முதலாவது

மற்றும் இரண்டாவது சுற்றுகளில்

வெளியேறி வந்தார்.

அத்துடன்

அவருக்கு சிறிய காயங்களும்

ஏற்பட்டு வந்தன.

இதனால்

அவர் தனது ஃபார்மை இழந்து

தவித்து வந்தார்.

இந்தாண்டும்

தற்போது வரை நடைபெற்றுள்ள

தொடர்களில் ஒரு தொடரில்

மட்டும் சாய்னா நேவால் காலிறுதி

சுற்று வரை சென்றார்.

மற்ற

தொடர்களில் முதல் சுற்றிலேயே

வெளியேறினார்.

குறிப்பாக

கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேஷியன்

ஓபன் தொடரில் முதல் சுற்றிலேயே

வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

கடந்த

ஆண்டு சாய்னா நேவால் இந்தோனேஷியன்

ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம்

வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற

உள்ள நிலையில் சாய்னா நேவால்

உலக தரவரிசையில் பின்னடைவை

சந்தித்துள்ளது பெரும்

ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே

11ஆவது

இடத்திலிருந்த சாய்னா நேவாலுக்கு

ஒலிம்பிக் கனவு கடும் சவாலாக

இருந்தது.

தற்போது

அவர் தரவரிசையில் இன்னும்

பின்தங்கியுள்ளது அவரின்

ஓலிம்பிக் கனவிற்கு மேலும்

முட்டுக் கட்டைப் போட்டுள்ளது.

2009ஆம்

ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக

சாய்னா உலக தரவரிசையில்

இவ்வளவு பின்னடைவை சந்தித்துள்ளார்.

இது

அவருக்கு ஒரு பெரிய நெருக்கடியாக

அமைந்துள்ளது.

கடந்த

2012ஆம்

ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்

போட்டியில் சாய்னா நேவால்

வெண்கல பதக்கம் வென்றார்.

பேட்மிண்டன்

பிரிவில் இந்தியா சார்பில்

பதக்கம் வெல்லும் முதல் இந்திய

வீராங்கனை என்ற சாதனையை அவர்

படைத்தார்.

பின்னர்

2016ஆம்

ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில்

பி.வி.சிந்து

வெள்ளிப்பதக்கம் வென்று

அசத்தினார்.

தரவரிசையில்

மற்றொரு இந்திய வீராங்கனையான

பி.வி.சிந்து

தொடர்ந்து 6ஆவது

இடத்தில் நீடிக்கிறார்.

ஆடவர்

ஒற்றையர் பிரிவில் சாய்

பிரனீத் 11ஆவது

இடத்தில் நீடிக்கிறார்.

மற்றோரு

வீரர் ஶ்ரீகாந்த இரண்டு

இடங்கள் பின்தங்கி 14ஆவது

இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

எனினும்

இந்தச் சோதனைகளிலிருந்து

சாய்னா நேவால் தனது சிறப்பான

ஆட்டத்தை வெளிப்படுத்தி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு

தகுதி பெறுவார் என்று ரசிகர்கள்

எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.