ரோம் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தம்: 7 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

Update: 2020-01-20 10:17 GMT

இத்தாலி

தலைநகர் ரோமில் ரேங்கிங்

சீரிஸ் சர்வதேச மல்யுத்த

போட்டிகள் நடைபெற்றன.

இந்தப்

போட்டியில் இந்தியா சார்பில்

மல்யுத்த வீரர்களும்

வீராங்கனைகளும் கலந்து

கொண்டனர்.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் வீராங்கனைகள் மொத்தமாக 7 பதக்கங்களை அள்ளி அசத்தியுள்ளனர். இதில் ஃப்ரீஸ்டைல் மற்றும் கிரேக்க ரோமன் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.

தங்கப் பதக்கத்துடன் வினேஷ் போகட்

மகளீருக்கான

ஃப்ரீஸ்டைல் 53கிலோ

எடைப் பிரிவில் வினேஷ் போகட்

தங்கப்பதக்கம் வென்றார்.

இவர்

அரையிறுதி போட்டியில் சீனாவை

சேர்ந்த உலகச் சாம்பியன்

குயானு பங்கை தோற்கடித்தார்.

கடந்த

உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில்

வெண்கல பதக்கம் வென்ற வினேஷ்

தற்போது இத் தொடரில் தங்கப்

பதக்கம் வென்றுள்ளார்.

இவர்

அடுத்து ஆசிய சாம்பியன்ஷிப்

மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்

போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

அதிலும்

சிறப்பாகச் செயல்பட்டுப்

பதக்கம் வெல்லுவார் என்று

எதிர்பார்க்கப்படுகிறது.

பஜ்ரங் புனியா

அதேபோல

ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல்

மல்யுத்த போட்டியின் 65

கிலோ

எடைப் பிரிவில் இந்தியாவின்

பஜ்ரங் புனியா தங்கம் வென்று

அசத்தினார்.

இவர்

இறுதிப் போட்டியில் அமெரிக்காவின்

ஜோர்டன் ஆலிவரை 4-3

என்ற

கணக்கில் தோற்கடித்தார்.

2019ஆம்

ஆண்டு நடைபெற்ற உலகச்

சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப்

பிறகு தற்போது தான் பஜ்ரங்

புனியா சர்வதேச மல்யுத்த

போட்டியில் பங்கேற்றுள்ளார்.

தனது

முதல் தொடரிலே அவர் தங்கப்பதக்கம்

வென்றுள்ளதால் வரும் ஒலிம்பிக்

தொடரிலும் அவர் பதக்கம்

வெல்லுவார் என்று வல்லுநர்கள்

கருதுகின்றனர்.

மேலும்

61

கிலோ

எடைப் பிரிவில் பங்கேற்ற

ரவிக்குமார் தாஹியா களமிறங்கினார்.

இவர்

வழக்கமாகக் களமிறங்கும் 57

கிலோ

பிரிவிற்குப் பதிலாக 61

கிலோ

பிரிவில் களமிறங்கினார்.

இந்தப்

பிரிவில் சிறப்பாக விளையாடிய

ரவிக்குமார் தாஹியா இறுதி

போட்டியில் கஜகிஸ்தான்

நாட்டின் நுருபலோட்டை 12-2

என்ற

கணக்கில் வீழ்த்தி தங்கப்

பதக்கம் வென்றார்.

குருபிரீத் சிங்

கிரேக்க ரோமன் பிரிவு மல்யுத்த போட்டிகளிலும் இந்தியர்கள் சுனில், சாஜன் மற்றும் அன்ஷூ மாலிக் ஆகியோ வெள்ளிப் பதக்கம் வென்றனர். மற்றொரு இந்திய வீரர் குருபிரீத் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். மொத்தமாக இந்திய அணி இத் தொடரில் 7 பதக்கங்களை வென்று குவித்தது.

2012ஆம்

ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்

முதல் தற்போது வரை நடைபெற்ற

அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும்

இந்தியா மல்யுத்தத்தில்

பதக்கம் வென்று வருகிறது.

அதேபோல

இந்த ஒலிம்பிக் தொடரிலும்

மல்யுத்தத்தில் இந்தியா

அதிகப் பதக்கங்களைக் குவிக்கும்

என்ற நம்பிக்கை அனைவரிடமும்

அதிகமாக எழுந்துள்ளது

குறிப்பிடத்தக்கது.