ராட்டர்டேம் ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் ரோஹன் போபன்னா - டெனிஸ் இணை

Update: 2020-02-12 14:19 GMT

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய நட்சத்திரமான ரோஹன் போபன்னா, ஜான் பியர்ஸ் மற்றும் மைக்கேல் வீனஸ் இணையை கடுமையாக போராடி (7-6, 6-7, 10-8) என வீழ்த்தி ராட்டர்டேம் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு தனது இணையான டெனிஸ் ஷபோவலோவுடன் இணைந்து தகுதிபெற்றார். இந்த இந்திய-கனடா ஜோடி ஆட்டத்தில் 12 ஏஸ் சர்வீஸ்களை செய்திருந்தாலும், அவர்களின் முதல் சர்வீஸ் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. அவர்களின் எதிரணியான ஆஸ்திரேலிய ஜோடி தங்களது முதல் சர்வீஸில் 69% சரியாக செய்திருந்தார்கள்.

ஆனால் அதற்கு ஈடுகட்டும் விதமாக தங்களது இரண்டாவது சர்வீஸினை சிறப்பாக செய்த போபன்னா, டெனிஸ் இணை மொத்தமாக சர்வீஸில் 59 புள்ளிகளை வென்றது. அவர்களுது எதிரணியோ 55 சர்வீஸ் புள்ளிகளை வென்றிருந்தது. மொத்த ஆட்டத்தில் பியர்ஸ், வீனஸ் இணை 81 புள்ளிகளும் போபன்னா, டெனிஸ் இணை 93 புள்ளிகளும் வென்றிருந்தனர்.

Image-TOI

நாளை நடக்கும் காலிறுதி ஆட்டத்தில் ரோஹன் போபன்னா, டெனிஸ் ஷபோவலோவ் இணை நெதர்லாந்தை சேர்ந்த ஜீன் ஜுலியன் ரோஜர் மற்றும் ரோமானியாவை சேர்ந்த ஹோரியா டெகாவு இணையை எதிர்கொள்கிறார்கள்.