சிங்கப்பெண் இந்துமதி  கால்பந்து விளையாடாமல் இருப்பது ஏன்?- வீடியோ

Update: 2020-07-12 10:30 GMT

தமிழ் திரைப்பட வரலாற்றில் பெண்கள் கால்பந்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் பிகில். இந்தப் படத்தில் இந்துஜா ரவிசங்கர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை இந்துமதியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். யார் இந்த இந்துமதி?

இந்துமதி கதிரேசன் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட நாட்டத்தினால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய கால்பந்து தொடரில் தமிழ்நாடு மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்தத் தொடரில் 10 கோல் அடித்து அசத்தினார். அத்துடன் தனது அயராத உழைப்பால் இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு தகுதிப் பெற்று விளையாடினார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்கு ஆசிய கால்பந்து போட்டியில் இவர் அதிக கோல்கள் அடித்த வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றார். அத்துடன் இந்திய அணி அந்தத் தொடரை வெல்ல முக்கியமானவராகவும் அமைந்தார். அதேபோல 2018ஆம் ஆண்டு இந்திய பெண்கள் கால்பந்து லீக் தொடரில் மதுரையைச் சேர்ந்த சேது எஃப்சி அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இவர் அமைந்தார்.

2019ஆம் ஆண்டு இந்துமதி விளையாடாததால், அரையிறுதியில் சேது எஃப்சி அணி தோல்வி அடைந்தது. அத்தகைய சிறப்பு மிக்க இந்துமதி கதிரேசன் கடந்த ஓராண்டாக கால்பந்து விளையாடவில்லை. இந்துமதி தற்போது தமிழ்நாடு காவல்துறையில் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவர் கொரோனா உரடங்கில் காவல்துறை உடை அணிந்து பணியாற்றியதை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் பாராட்டியிருந்தார்.

நிழற்படம்: இந்திய கால்பந்து சம்மேளனம்

அதற்கு காரணம் என்ன என்பது தொடர்பாக விளையாட்டு சமந்தமான செய்திகளை சேகரிக்கும் பிரபல பத்திரிகையாளர் ரகு ஆராய்ந்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘கோல் கியூவிஸ்’ யூடியூப் செனலில் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் இந்துமதி கதிரேசன் தற்போது தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.

எனவே தமிழ்நாடு பெண்கள் காவல்துறையின் கால்பந்து அணியில் இந்துமதி விளையாடுகிறார். இந்திய மகளிர் கால்பந்து அணியின் பயிற்சிக்கு இந்துமதியை அனுப்புமாறு தமிழ்நாடு காவல்துறை மகளிர் அணிக்கு மின்னஞசல் வந்துள்ளது. ஆனால் தமிழ்நாடு காவல்துறை மகளிர் அணியின் பயிற்சியாளர் இளங்கோ அதற்கு பதிலளிக்காமல் விட்டதாக ரகு இந்தக் காணொளியில் தெரிவித்துள்ளார்.

Full View

மேலும் இதுகுறித்து ரகு, தமிழ்நாடு காவல்துறையின் பெண்கள் அணியின் பயிற்சியாளர் இளங்கோவிடம் கேட்டுள்ளார். அதற்கு இளங்கோ தனக்கு இதுகுறித்து தகவல் எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் கால்பந்து அணியை பொருத்தவரை அதிகளவில் வீராங்கனைகள் மணிப்பூரிலிருந்தே தேர்வாகி வருகின்றனர். ஆனால் இதற்கு மாறாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துமதி தேர்வாகி அசத்தியுள்ளார்.

இத்தகைய திறமை நடுகள ஆட்டாகாரர் இந்துமதி மீண்டும் தமிழ்நாடு மற்றும் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்பதே கால்பந்து ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.