மகாராஷ்டிரா ஓபன்: காலிறுதிக்கு முன்னேறியது ராமநாதன் - ராஜா இணை

Update: 2020-02-06 05:26 GMT

மகாராஷ்டிரா ஓபன் டேனிஸ் தொடரின்

மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. தெற்கு ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி

டென்னிஸ் தொடரான இதில், சர்வதேச டென்னிஸின் முன்னணி வீரர்

வீராங்கனைகள் கலந்து கொள்வர்.

இந்த தொடர் முதன் முதலாக 1996ஆம் ஆண்டு தொடங்கியது. முதலில் இத்தொடர் டெல்லியில்

நடைபெற்றது. பின்னர் அது சென்னைக்கு மாற்றப்பட்டு சென்னை ஓபன் என்று நடைபெற்றது.

அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு புனேவிற்கு மாற்றப்பட்டு

மகாராஷ்டிரா ஓபன் என்ற பெயரை பெற்றது.

நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகளில், இந்தியாவின் ராம்குமார்

ராமநாதன் - புரவ் ராஜா இணை வெற்றி பெற்றது. இந்தியாவின் சுமித் நகல் - பெலாரஸின்

எகர் ஜெராஸிமோவுக்கு எதிரான போட்டியில் 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி

பெற்றனர். இதன் மூலம், இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்

மற்றொரு போட்டியில், இந்தியாவின் ரோஹன் போபன்னா - அர்ஜூன் காதே இணை, பிரான்சு நாட்டின் பெனாய்ட் பாய்ரே - அண்டாய்னி ஹோயாங் இணையை எதிர்த்து விளையாடியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், 3-6,7-5,10-7 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் தோல்வியைத் தழுவினர். முதலில் ஆதிக்கம் செலுத்தினாலும், அடுத்தடுத்த செட்களில் ஏமாற்றம் அளித்தனர்

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் முகுந்த் -

ஜப்பானின் தாரோ டானியல் மோதினர். இந்த போட்டியில் 6-2, 7-6 (9-7) என்ற செட் கணக்கில்

இந்திய வீரர் தோல்வியுற்றார்

இன்று நடக்கும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நம்பர்

வீரரான, தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணசேகரன் போட்டியிடுகிறார். இந்த

போட்டியில் வெற்றி பெற்றால், அவர் காலிறுதிக்கு முன்னேறுவார். இன்று, தென்

கொரியாவின் குவான் சூன் வூவை எதிர்த்து விளையாடுகிறார்

இதே போல, ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ராம்குமார்

ராமநாதன் - புரவ் ராஜா இணை, இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஆஸ்திரேலியாவின் மேத்யூ

எப்டன் இணையை எதிர்கொள்கிறது