பி.பி.எல் அப்டேட் - கஷ்யப் ஏமாற்றம்... பூனேவிடம் சரண்டரான மும்பை

Update: 2020-01-26 06:25 GMT

2020 பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகளின் முதற்கட்ட போட்டிகள் சென்னை நேரு

உள்விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்தது. இப்போது லக்னோ பாபு பனாரசி தஸ் யூ.பி

பேட்மிண்டன் அகாடெமியில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த முதல் டையில், நடிகை தாப்ஸி, கே.ஆர்.ஐ எண்டெர்டெயின்மெண்ட் ஆகியோர்

இணைந்து உரிமையாளராக இருக்கும் பூனே 7 ஏஸஸ் அணியும், மும்பை ராக்கெட்ஸ் அணியும்

மோதின.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டையில், 4 போட்டிகளில் வெற்றி பெற்று பூனே அணி அதிரடி காட்டியது. முதலில் தொடங்கிய ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில், பூனேவின் சிராக் செட்டி - ஹேந்திரா செட்டியாவான் இணை கிம் ஜி ஜங் - கிம் சா ரங் இணையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 14-15, 15-5, 15-6 என்ற செட் கணக்கில் பூனே அணி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து நடந்த இரண்டு போட்டிகளிலும் பூனே அணி வெற்றியை ஈட்டியது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், 11-15, 15-9, 15-9 என பூனேவின்

ரித்துபர்னா தாஸ், மும்பையின் ஶ்ரீயான்ஷி பர்தேசியை வென்றார். இதே போல ஆண்களுக்கான

ஒற்றையர் பிரிவு போட்டியில், மும்பை அணியின் கேப்டன், நட்சத்திர வீரர் கஷ்யப்பை

15-7, 15-7 என்ற நேர் செட் கணக்கில் பூனேவின் லோஹ் தோற்கடித்தார்.

மூன்று போட்டிகளின் முடிவில், பூனே அணி 4-0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்த

டையை பூனே அணி வென்றதாக இருந்தாலும், கடைசி இரண்டு போட்டிகளை இரு அணிகளும்

தொடந்ர்து விளையாடின.

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் மட்டும், மும்பையின் கியூன் கைக்கொடுக்க 7-15, 13-15 என்ற செட் கணக்கில் பூனேவின் சகாயை தோற்கடித்தார். இது டிரம்ப் கேம் என்பதால் மும்பை அணி இரண்டு புள்ளிகள் கிடைத்தது.

கடைசி போட்டியான கலப்பு இரட்டையர் பிரிவில் 15-12, 10-15, 15-6 என்ர செட்

கணக்கில் பூனேவின் சி.அடகாக் - ஜி.அடகாக் இணை மும்பையின் ஜங் - பெர்ண்டாடெத் இணையை

வென்றது.

ஐந்து போட்டிகளின் முடிவில் 5-2 என்ற புள்ளிகணக்கில் பூனே அணியை டையை வென்றது. இன்று நடக்க இருக்கும் டையில், அவாதி வாரியர்ஸ் - ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணிகள் மோத உள்ளனர்.