2020 பி.பி.எல்: சென்னையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த பூனே!

Update: 2020-01-31 02:41 GMT

2020 பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் சென்னை, லக்னோவை அடுத்து ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரண்டு டைகள் நடைபெற்றன.

முதல் டையில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் - பூனே 7 ஏஸஸ் அணிகள் மோதின. இதுவரை நடந்து

முடிந்த போட்டிகளில் சென்னை, பூனே அணிகளே தோல்வியின்றி விளையாடி வந்தன. பலம்

வாய்ந்த இரண்டு அணிகள் மோதிய டையில், 5-2 என்ற புள்ளிக்கணக்கில் பூனே வெற்றி பெற்றது.

கலப்பு இரட்டையர் பிரிவில், பூனேவின் அட்காக் இணை 15-10, 15-12 என்ற நேர் செட் கணக்கில் சென்னையின் சாத்விக் - புக் இணையை வென்றது. அடுத்து நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் மட்டும் பூனேவின் ரித்துபர்னா தாஸ் ஏமாற்றம் அளித்தார். இது பூனேவின் டிரம்ப் கேமாக இருந்த நிலையில், 12-15, 6-15 என்ற நேர் செட் கணக்கில் சென்னையின் கில்மோரிடம் வீழ்ந்தார். இதனால், சென்னை அணிக்கு இரண்டு  புள்ளிகள் கிடைத்தது.

ஆனால், முன்னிலை பெற்ற சென்னை அணிக்கு அடுத்தடுத்து ஏமாற்றமே. ஆண்கள் ஒற்றையர்

பிரிவின் இரண்டு போட்டிகளும், இரட்டையர் பிரிவு போட்டியையும் சென்னை அணி இழந்தது.

லோஹ் - லக்‌ஷயா சென் மோதிய போட்டியில் 15-13, 10-15, 15-8 என்ற செட் கணக்கில் லோஹ் போட்டியை வென்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டையர் பிரிவு போட்டியில் சிராக் செட்டி - செட்டியாவான் ; சாத்விக் - பி.எஸ் ரெட்டி இணை மோதிய போட்டியில் 15-12, 15-14 என்ற நேர் செட் கணக்கில் பூனே அணி வென்றது.

கடைசி போட்டியில் சகாய் - கருணாகரன் மோதினர். இந்த போட்டியையும் 15-10, 15-12 என நேர் செட் கணக்கில் பூனே அணி வென்றது. ஐந்து போட்டிகளின் முடிவில், 5-2 என்ற புள்ளிக்கணக்கில் பூனே அணி டையை வென்றது. இந்த சீசனில், சென்னை அணி இழந்த முதல் டை இது. சென்னை அணியின் தொடர் வெற்றிக்கு பூனே அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதே போல, மற்றொரு டையில் மும்பை ராக்க்டெட்ஸ் - நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ்

அணிகள் மோதின. இந்த போட்டியில் 2-5 என்ற புள்ளிக்கணக்கில் நார்த் ஈஸ்டர்ன்ஸ்

வாரியர்ஸ் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியிலும், மும்பை அணி கேப்டன் கஷ்யப்

சோபிக்கவில்லை, தொடர்ந்து போட்டியை இழந்து வருவது, மும்பை அணிக்கு பின்னடைவாக

அமைந்துள்ளது.

இன்று நடக்க இருக்கும் டையில், ஹைதராபாத் ஹண்டர்ஸ் - பெங்களூரு ராப்டர்ஸ்

அணிகள் மோத உள்ளனர்.