மேரி கோமிற்கு பத்மவிபூஷன் விருதும், பி.வி.சிந்துவிற்கு பத்மபூஷன் விருதும் அறிவிப்பு

Update: 2020-01-25 17:25 GMT

இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டை நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பதம் விருதுகளை இந்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டிலேயே இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருது குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குத்துச்

சண்டை வீராங்கனை மேரி கோம்

6 முறை

உலக சாம்பியன் பட்டத்தை

வென்றுள்ளார்.

அத்துடன்

அவர் 2012ஆம்

ஆண்டு லண்டன் ஒலிம்பிக்

போட்டியில் வெண்கல பதக்கம்

வென்றார்.

மேலும்

மேரி கோம் தற்போது மாநிலங்களவையில்

எம்பியாகவும் பணியாற்றி

வருகிறார்.

அதேபோல மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பி.வி.சிந்து 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். மேலும் உலக சாம்பியின்ஷிப் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து ஒரு தங்கம்,2 வெள்ளி,2 வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றுள்ளார். அத்துடன் தற்போது சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தான்.

இவர்களுடன்

இணைந்து 6

பேருக்கு

பத்மஶ்ரீ விருதுகளும்

அறிவிக்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட்

வீரர் ஜாகீர் கான்,

மகளீர்

ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால்,

முன்னாள்

ஹாக்கி வீரர் கணேஷ்,

துப்பாக்கிச்

சுடுதல் வீரர் ஜித்து ராய்,

மகளீர்

கால்பந்து கேப்டன் பேம்பேம்

தேவி,

வில்வித்தை

வீரர் தருண்தீப் ராய்

ஆகியவர்களுக்கு பத்மஶ்ரீ

விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

பத்மஶ்ரீ விருதிற்கு மல்யுத்த

வீராங்கனை வினேஷ் போகாட்,

டேபிள்

டென்னிஸ் வீராங்கனை மானிகா

பட்ரா,

மகளீர்

கிரிக்கெட் கேப்டன் ஹர்மன்பிரீத்

கவுர்,

முன்னாள்

துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை

சுமா சுரீர்,

மலை

ஏற்ற சகோதரிகளான டாஷி மற்றும்

நுங்குஷி மாலிக் ஆகியோர்

பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

எனினும்

இவர்கள் யாரும் கடைசியாக

விருது அறிவிக்கப்பட்டுள்ள

பட்டியலில் இடம்பெறவில்லை

என்பது குறிப்பிடத்தக்கது.