பிபிஎல் - தரவரிசை பட்டியலில் சென்னையை முந்திய நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ்

Update: 2020-02-04 13:46 GMT

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் சென்னை, லக்னோவை தொடர்ந்து

ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கில்

நடந்த இன்றைய போட்டியில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் - சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்

அணிகள் மோதின

ஏற்கனவே 2020 பிரீமியர் பேட்மிண்டன் லீகின் அரை இறுதிக்கு சென்னை அணி

முன்னேறிவிட்டது. இருப்பினும், இன்று நடந்த விறுவிறுப்பான டையில், கடைசி போட்டி

வரை போராடி தோற்றது சென்னை அணி

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியுடன் தொடங்கியது இன்றைய டை. இந்த

போட்டியில், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸின் தர்மாமர் 15-3, 15-11 என்ற நேர் செட்

கணக்கில் சென்னையின் கருணாகரனை தோற்கடித்தார்.

அடுத்து நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், சென்னையின் பி.எஸ் ரெட்டி - கபிலா இணை 13-15, 14-15 என இசாரா - கரகா இணையை வென்றது

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டி சென்னை அணிக்கு டிரம்ப் கேமாக இருந்தது.

இந்த போட்டியில் சென்னையின் கில்மோர், 12-15, 11-15 என்ற நேர் செட் கணக்கில்

சலிஹாவை வென்றார்

இதே போல, நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸின் டிரம்ப் கேமான ஆண்கள் ஒற்றையர் பிரிவு

போட்டியில் இயூ வென்றார். 15-8, 15-11 என்ற நேர் செட் கணக்கில் சுப்ரமணியனை

வென்றார்

இதனால், நான்கு போட்டிகளின் முடிவில் 3-3 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இதனால், ஐந்தாவது போட்டிக்கான பரபரப்பு அதிகரித்தது.

கடைசியாக நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸின் தே - கே.எச் நா இணை சென்னையின் கபிலா - எஸ்.சந்தோஷ் இணையை எதிர்த்து விளையாடினர்

இந்த போட்டியில் 15-11, 15-9 என்ற நேர் செட் கணக்கில் நார்த் ஈஸ்டர்ன்

வாரியர்ஸ் வெற்றி பெற்று, டையையும் வென்றது

இதனால், 2020 பிபிஎல் தரவரிசை பட்டியலில் இத்தனை நாட்களாக முதல் இடத்தில்

நீடித்து வந்த சென்னை அணியை இரண்டாம் இடத்துக்கு தள்ளியது நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ்.

இப்போதைய நிலையில், 22 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது நார்த் ஈஸ்டர்ஸ்

வாரியர்ஸ். ஆனால், ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறியுள்ள சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்

அணிக்கு இந்த தோல்வியால் எந்த பாதிப்பு இல்லை.