தடைகளை தாண்டி சாதித்து காட்டிய சிங்கப் பெண்: கோ-கோ அணியின் கேப்டன் நஸ்ரீன்

Update: 2020-01-17 07:42 GMT

இந்திய

மகளீர் கோ-கோ

அணி கடந்த ஆண்டு டிசம்பர்

மாதம் நடைபெற்ற தெற்கு ஆசிய

விளையாட்டு போட்டியில் தங்கப்

பதக்கம் வென்றது.

இறுதி

போட்டியில் இந்திய மகளீர்

அணி நேபாள் அணியை 17-5

என்ற

கணக்கில் வென்றது.

இந்த

ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி

அணி தங்கப்பதக்கம் வெல்ல

உறுதுணையாக இருந்தவர் அணியின்

கேப்டன் நஸ்ரீன் ஷேக்.

யார் இந்த நஸ்ரீன் ஷேக்? அவர் கடந்த வந்த பாதை என்ன?

பீகார் மாநிலம் அரேரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நஸ்ரீன் ஷேக். இவருடைய தந்தை முகமது கஃபூர் தெருக்களில் பாத்திரங்கள் விற்று வருகிறார். 11 குழந்தைகள் பிறந்த வீட்டில் நான்காவது குழந்தையாக நஸ்ரீன் ஷேக் பிறந்துள்ளார்.

நஸ்ரீன்

ஷேக் இஸ்லாமிய மதத்தைச்

சேர்ந்தவர் என்பதால் அவர்

கால் சட்டை அணிந்து விளையாடுவதற்கு

அவரது உறவினர்கள் கடும்

எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும்

இவை எதையும் பொருட்படுத்தாமல்

தனக்கு பிடித்த கோ-கோ

விளையாட்டு தாய் மற்றும்

தந்தையின் ஆதரவுடன் விளையாடி

உள்ளார்.

நஸ்ரீனின்

திறமையை பார்த்த அவரது

பயிற்சியாளர் அவரை ஆண்கள்

அணியுடன் இணைந்து பயிற்சி

செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால்

நஸ்ரீன் ஆண்கள் அணியுடன்

இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

தொடக்கத்தில்

இவருக்கு சற்று கடினமாக

இருந்துள்ளது.

எனினும்

நாளடைவில் நஸ்ரீன் ஒரு வலிமையான

கோ-கோ

வீராங்கனையாக மாற அதுவே

உறுதுணையாக அமைந்துள்ளது.

நஸ்ரீனின் தந்தை

இந்தப்

பயிற்சியின் மூலம் அவர்

மிகவும் வலிமையுடனும் வேகத்துடன்

கோ-கோ

விளையாடியுள்ளார்.

பல

நேரங்களில் இவரை சக வீரர்களால்

பிடிக்க முடியாமல் திணறியுள்ளனர்.

இவரின்

திறமையை பார்த்த தந்தை முகமது

"நீ

எப்படியாவது இந்திய அணிக்காக

விளையாட வேண்டும்” என்று

கூறியுள்ளார்.

தந்தையின்

வாக்கை நிறைவேற்ற போராடிய

நஸ்ரீனுக்கு 2016ஆம்

ஆண்டு முதல் முறையாக கோ-கோ

சாம்பியன்ஷிப் போட்டியில்

விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதனைத்

தொடர்ந்து 2018ஆம்

ஆண்டு லண்டனில் நடைபெற்ற

கோ-கோ

போட்டியில் விளையாடவும்

வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து

தெற்கு ஆசிய போட்டிகளுக்கான

இந்திய அணியிலும் வாய்ப்பு

கிடைத்துள்ளது.

அந்த

அணிக்கு தலைமை தாங்கும்

பொறுப்பு கூடுதலாக நஸ்ரீனுக்கு

அமைந்தது.

தெற்கு

ஆசிய போட்டிகளில் இந்திய

மகளீர் அணியை சிறப்பாக வழி

நடத்திய நஸ்ரீன் தங்கப்பதக்கம்

வெல்ல முக்கிய காரணமாக

அமைந்தார்.

தற்போது

நஸ்ரீன் விமானநிலைய அலுவலகத்தில்

மத்திய அரசுப் பணியில் உள்ளார்.

இந்தப்

பணியின் மூலம் அவருக்கு மாத

வருமானமாக 26ஆயிரம்

ரூபாய் கிடைத்து வருகிறது.

தற்போது

நஸ்ரீனின் தந்தை மிகவும்

மகிழ்ச்சியாக உள்ளார்.

"இனி

நஸ்ரீன் என் மகள் அல்ல,

நான்

நஸ்ரீனின் தந்தை"

என்று

மகிழ்ச்சியாக முழக்கமிட்டு

வருகிறார்.

தடைகளை

கண்டு பலர் அஞ்சும்

நேரத்தில் தடைகற்களை தனது

கனவிற்கான படிக் கற்களாக

மாற்றிய நஸ்ரீனின் பயணம் நம்

அனைவருக்கும் ஒரு பாடமாக

அமைந்துள்ளது.

அதிலும்

தடைகளை கண்டு துவண்டு இருக்கும்

பெண் சமூதாயத்திற்கு நஸ்ரீனின்

வாழ்க்கை பயணம் ஒரு தூண்டுகோளாக

அமையும் என்பதில் எந்தவித

சந்தேகமும் இல்லை.