லடாக் பகுதியில் கேலோ இந்தியா விளையாட்டுகள் நடத்த திட்டம்

Update: 2020-02-13 18:24 GMT

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் லடாக் பகுதியில் நடத்தப்படும் என மத்திய

விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்

ஐஸ் ஹாக்கி, ஸ்கேட்டிங், ஸ்பீடு ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகள் அடங்கிய

குளிர்கால விளையாட்டு போட்டிகள் லடாக் பகுதியில் நடைபெற உள்ளன. பிப்ரவரி மூன்றாவது

வார இறுதியில் தொடங்கும் இப்போட்டிகள் மார்ச் முதல் வாரம் வரை நடைபெற உள்ளன.

இத்தொடரில் விளையாட, 1700-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்க

உள்ளனர்

19- 21 வயது, 17- 18 வயது, 15 – 16 வயது என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள்

நடத்தப்பட உள்ளன. 15 மாநிலங்களில் இருந்தும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள்

பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிகளுக்கான செலவுகளை மத்திய விளையாட்டுத்துறை

பொறுப்பேற்க உள்ளது.

இது குறித்து பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “ஒலிம்பிக் விளையாட்டுக்களான ஐஸ்

ஹாக்கி, ஃபிகர் ஸ்கேட்டிங், ஸ்பீடு ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டுகளை போட்டியில்

சேர்த்துள்ளோம். இதன் மூலம், இந்தியாவில் இருந்தும் இந்த விளையாட்டுகளில்

சாம்பியன்களை உருவாக்க முடியும். இந்த தொடர் கேலோ இந்தியா விளையாட்டின் மூன்றாவது

பதிப்பாக அமையும். ஒரே ஆண்டு, மூன்றாவது நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது மகிழ்ச்சி

அளிக்கிறது” என்றார்.