கேலோ இந்தியா யுனிவர்ஸிட்டி கேம்ஸ் 2020: கூடைப்பந்து போட்டியில் சாம்பியனான தமிழக அணிகள்

Update: 2020-02-25 10:50 GMT

கேலோ இந்தியா யூத் கேம்ஸின் வெற்றியை தொடர்ந்து மாணவர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை மேலும் வளர்க்க விளையாட்டு மினிஸ்ட்ரி கேலோ இந்தியா யுனிவர்ஸிட்டி கேம்ஸினை தொடங்கியுள்ளது. நேற்று நடந்த கூடைப்பந்து போட்டியில், தமிழக அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா முழுவதும் உள்ள யுனிவர்ஸிட்டிகளில் பயிலும் சிறந்த வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். பிப்ரவரி 22 தொடங்கிய இந்த போட்டிகள் மார்ச் 1 வரை ஒடிசாவில் நடக்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் இருந்து 3000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 15க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.

அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க நேற்று நடந்த பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இரு அணிகளான ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியோர் மோதினார்கள். இந்த இரு அணிகளும் சென்னையை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஆடினார்கள். மாறிமாறி லீடினை கைப்பற்ற ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 59 புள்ளிகளை வென்றிருக்க ஆட்டம் சமனில் முடிந்தது.

அடுத்து தொடங்கிய எக்ஸ்டரா டைமிலும் இரு அணிகள் கடுமையாக போராடினார்கள். 5 நிமிடத்தின் முடிவில் இரு அணிகளும் 67 என்ற கணக்கில் மீண்டும் சமநிலையில் இருந்தனர். இரண்டாவது எக்ஸ்ட்ரா டைமும் பரபரப்பாக சென்றது. இக்கட்டான சூழ்நிலையில் தொடர்ந்து இரண்டு 3 புள்ளிகள் எடுத்ததன் மூலம் கோப்பையை வென்றனர் யுனிவர்ஸிட்டி ஆஃப் மெட்ராஸ் மகளிர் அணியினர். இந்த போட்டிக்கு முன்னதாக நடந்த ஆண்கள் இறுதிப்போட்டியில் யுனிவர்ஸிட்டி ஆஃப் மெட்ராஸ் ஆண்கள் அணியினர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.