கொரோனா வைரஸ் பாதிப்பினால் தள்ளிவைக்கபட்ட ஐடிடிஃஎப் ஜப்பான் ஓபன் 2020

Update: 2020-03-10 15:50 GMT

உலகெங்கிலும் தற்போது அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை கொரோனா வைரஸ் தான். இதற்கு விளையாட்டு வீரர்களும் விதிவிலக்கு இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பெருமைமிக்க ஒலிம்பிக் திருவிழா இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் இந்த சமயத்தில், இந்த நோய் அனைவரையும் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியுள்ளது. தொடர்ந்து பல விளையாட்டு தொடர்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால் ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் தகுதிபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது வருகிற ஏப்ரல் 21 முதல் ஜப்பானில் நடக்க இருந்த 2020 ஐடிடிஃஎப் உலகத்தொடர் ஜப்பான் ஓபன் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களின் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த முடிவு எடுக்க பட்டுள்ளதாக இன்டர்நேஷனல் டேபிள் டென்னிஸ் ஃபெடரேஷன், ஜப்பான் டேபிள் டென்னிஸ் அசோஷியேஷன் மற்றும் லோக்கல் ஆர்கனைசிங் கமிட்டி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த சுழ்நிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அடுத்தடுத்து ஹாங்காங் மற்றும் சைனாவில் நடக்கவுள்ள போட்டிகளை பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர். இந்த செய்தியினை இந்திய அணியின் முன்னனி வீரரான சத்தியனும் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்திருப்பது குறிப்படதக்கது.

[embed]http://twitter.com/sathiyantt/status/1237309077383819264?s=09[/embed]

இது டேபிள் டென்னிஸ் போட்டிகளில் மட்டுமில்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் நடந்து வருகிறது. கடந்த வாரம் சில பேட்மிண்டன் போட்டிகள் ரத்துசெய்ய பட்ட நிலையில், இன்று முக்கிய டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான இந்தியன் வெல்ஸ் போட்டி ரத்துசெய்யப்பட்டது. கடைசி நேரத்தில் இது நடந்ததால் வீரர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதே போல் மல்யுத்தம், ஷூட்டிங், ஜூடோ, செய்லிங் என பல விளையாட்டு தொடர்கள் ரத்து செய்யபட்டு வருவதால் வீரர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.