ஐ எஸ் எல் கால்பந்து தொடரின் அடுத்த சீசனில் ஒரு புதிய அணி

Update: 2020-07-11 13:47 GMT

ஐ எஸ் எல் கால்பந்து தொடரின் அடுத்த சீசனில் ஒரு புதிய அணி தனது பயணத்தை தொடங்க போகிறது. மிகவும் பழமை மற்றும் பெறுமை வாய்ந்த கொல்கத்தாவினை சேர்ந்த மோகன் பகான் அணியின் பங்குகளில் வாங்கியது ஐ எஸ் எல்-ல் விளையாடும் கொல்கத்தாவினை சேர்ந்த மற்றொரு அணியான ஏ டி கே. இதனால் இரு அணிகளும் இனைந்து ஒரு அணியாக வரும் ஐ எஸ் எல் தொடரில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அணியின் பெயர் மற்றும் ஜெர்சி எதுவும் வெளியிடப்படவில்லை.

இது ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பாகவே இருந்து வந்தது. குறிப்பாக மோகன் பகான் ரசிகர்களிடம் சற்று அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று அணி உரிமையாளர்களால் வெளியிடப்பட்டது. அணியன் பெயர் ஏ டி கே மோகன் பகான் ஃஎப் சி என்றும், புகழ் வாய்ந்த பச்சை மற்றும் மரூன் நிறத்திலேயே புதிய ஜெர்சியும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த புதிய அணியின் லோகோவும் பழைய மோகன் பகான் அணியின் லோகோவிலிருந்து பெரிதும் வித்தியாசமானதாக இல்லை.

ஏ டி கே மோகன் பகான் ஃஎப் சி அணியின் போர்ட் மெம்பர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலியும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு அணிகளும் தங்களது கடந்த சீசனில் சாம்பியன்கள் ஆவார்கள். ஏ டி கே அணி ஐ எஸ் எல் தொடரிலும், மோகன் பகான் அணி ஐ லீக் தொடரிலீம் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ஏ ஃஎப் சி சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியா சார்பாக ஏ டி கே மோகன் பகான் ஃஎப் சி அணி பங்கேற்கும் என்பதால் அணியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமும், எதிர்ப்பார்ப்புமாக உள்ளார்கள்.