உலகளவில் சாதனை படைத்துள்ள ஐபிஎல் 2020 முதல் போட்டி

Update: 2020-09-22 14:31 GMT

ஐ பி எல் என்றாலே நிச்சயமாக ஒரு விளையாட்டு திருவிழா தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் விரும்பி பார்க்கும் தொடர் இதுவாகும். எப்பொழுதும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் இத்தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 2008ல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் இந்த ஆண்டு நடைபெறுமா என அனைவரும் கவலையில் இருந்த நேரத்தில் 13ஆவது சீசன் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என இந்தியக் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனால் மகிழ்ச்சியாக இருந்த ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஐ சி எல் தொடரின் ஜாம்பவான் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் என அறிவிக்கப்பட்டது. பல மாதங்களாக எந்த விளையாட்டு போட்டிகளையும் காணாமல் இருந்த ரசிகர்களிடையே இந்த அறிவிப்புகளினால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து செப்டம்பர் 19 அன்று நடந்த முதல் போட்டியில் உலக அளவில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

[embed]https://twitter.com/JayShah/status/1308324936193171456[/embed]

இதுகுறித்து பி சி சி ஐ செகரேட்டரி ஜெய் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, இதுவரை எந்த விளையாட்டு நிகழ்ச்சியிலும் இல்லாத அளவுக்கு இந்த போட்டியினை 20 கோடி மக்கள் நேரலையாக பார்த்துள்ளாதாக பதிவிட்டுள்ளார். உலகளவில் நடக்கும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் இதுவே மிகப்பெரிய சாதனை எனவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.